Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மியான்மார் முஸ்லீம்களின் அவலம்:இலங்கை முஸ்லீம்கள் தொலைவில் இல்லை

அகதி முகாம்களில் ரோகின்யா முஸ்லீம்கள்
அகதி முகாம்களில் ரோகின்யா முஸ்லீம்கள்

உலகில் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டிருப்பவர்களில் மியான்மார் ரோகின்கியா முஸ்லீம்களும் அடங்குவர். பௌத்த அடிப்படைவாதிகளால் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படும் இவர்கள் உலகில் திட்டமிட்ட தீவிர அழிப்பிற்கு உள்ளாக்கப்படும் மக்கள் கூட்டங்களில் ஒன்று என ஐ.நா தெரிவிக்கின்றது. எல்லைகளற்ற மருத்துவர்கள் எனக் கூறப்படும் தன்னார்வ நிறுவனம் அகதி முகாம்களில் இட நெருக்கடிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பலர் மடிந்து போகின்றனர் என்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இன்று வெளியிடப்பட்ட இந்த நிறுவனத்தின் அறிக்கை பல அதிர்ச்சித் தகவல்களை உள்ள்டக்கியுள்ளது. கொல்லப்படும் வரை காத்திருந்து எஞ்சியவர்களை காப்பதாகக் கூறும் இத் தன்னார்வ நிறுவனங்கள் மக்களின் நண்பர்கள் அல்ல எனினும் இவர்களின் அறிக்கைகளே பல சமயங்களில் தரவுகளாகக் கிடைக்கின்றன.

பௌத்த துறவிகள் மற்றும் குழுக்களால் மிருகத்தனமான இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்படும் மியான்மார் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை அந்த நாட்டின் அரசு கண்டுகொள்வதில்லை. உலகின் மிகப்பெரும் ஜனநாயக வாதியாகப் போற்றப்படும் அன் யான் சூ கி மியான்மார் இஸ்லாமியர்களின் படுகொலைகள் குறித்து வாய் திறப்பதில்லை.

இலங்கையில் பொது பல சேனா என்ற அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்திவருகிறது.

இலங்கை அரச ஆதரவு பௌத்த பயங்கரவாதியான ஞானதாச தேரர், மியான்மார் நிலைமைகளைக் கற்றுக்கொள்வதற்காக கடந்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மியான்மார் இனப்படுகொலைகளுடன் தொடர்புடைய 969 இயக்கத்தைச் சேர்ந்த பௌத்த பயங்கரவாதியான அஷ்வின் விராது தேரர் பொதுபல சேனா அமைப்பின் அழைப்பை ஏற்று இலங்கை சென்றார்.

இலங்கை-மியான்மார் பௌத்த பயங்கரவாதிகளின் சந்திப்பு

 இஸ்லாமியர்களாலும் மற்றைய மதங்களாலும் பௌத்த மதம் தாக்குதலுக்கு உட்படுத்தப்படுவதால் பௌத்த மதத்தைப் பாதுகாக்க உலகளாவிய ஒத்துழைப்பை உருவாக்குவோம் என மியான்மார் இனக்கொலையாளியைச் சந்திக்கும் போது ஞானதாச தேரர் கூறினார்.

இலங்கையில் தமிழ்ப் பேசும் முஸ்லீம்கள் அரச சார்பு தரகு முதலாளித்துவ தலைமைகளால் ஏமாற்றப்படுகின்றனர். ஏழை உழைக்கும் முஸ்லிம்களை சுரண்டி பொது பல சேனாவை உருவாக்கிய அரசின் அடிமைகளான தலைமைகளை நிராகரித்து இலங்கை முஸ்லீம்கள் அரசுக்கு எதிராகத் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளத் தவறினால், ரோகின்யா முஸ்லீம்களின் நிலை இலங்கை முஸ்லீம்களுக்கு உருவாகும். ஏனைய ஒடுக்கப்படும் தேசிய இனங்களோடும், சிங்கள மக்களின் அரசிற்கு எதிரான முற்போக்கு ஜனநாயக சக்திகளோடும் இணைந்து தன்னுரிமைக்கான போராட்டத்தில் முஸ்லீம்கள் தம்மைப் பலப்படுத்தாவிட்டால் எதிர்காலம் ஆபத்தானதாகவே அமையும்.

Exit mobile version