நோர்வே நாட்டின் நிதி வழங்கலில், கோத்தாபய ராஜபக்ச என்ற அரச பயங்கரவாதியின் ஆசிர்வாதத்துடன் தோற்றுவிக்கப்பட்ட பௌத்த பயங்கரவாத அமைப்பான பொது பல சேனாவின் மாநாட்டில் மியாமார் பிக்குவான வீராது கலந்துகொண்டார். தேரவாத பௌத்தம் சிறுபான்மைத் தேசிய இனங்களைக் கொன்று குவிக்கும் மற்றொரு நாடான மியாமாரிலிருந்து இலங்கை சென்ற வீராது என்ற பௌத்த பயங்கரவாத துறவி பொது பல சேனாவுடன் இணைந்து ஜிகாதி அபாயத்திலிருந்து பௌத்தத்தைப் பாதுகாக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
பர்மாவின் பின்லாடன் எனத் தன்னைத் தானே அழைத்துக்கொள்ளும் வீராது காவியுடைக்குள் மறைந்துள்ள விசக் கிருமி. 46 வயதான வீராது ரோகின்யா முஸ்லீம்களின் மீதான இனப்படுகொலையைத் தூண்டியவர்களில் பிரதனமானவர். மியான்மாரின் பௌத்த பயங்கரவாத அமைப்பான 969 இன் முக்கியஸ்தர்.
இலங்கையின் பௌத்த பயங்கரவாதக் குண்டர்களான பொதுபல சேனா அரச ஆதரவுடன் கொழும்பில் நடத்திய மாநாட்டிற்கு வீராது சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இலங்கையில் தமிழ்ப் பேசும் இஸ்லாமியர்களின் பிழைப்புவாதத் தலைவர்கள் ராஜபக்ச பாசிசத்தின் ஒட்டுண்ணிகளாக உலாவரும் கொழும்பில் இஸ்லாமியர்களைக் கொலைசெய்யும் பயங்கரவாதிகள் கூட்டம் கூடிக் கூச்சலிட்டனர். அடிக்கொரு தடவை அல்லாஹு அக்பர் என உரக்கக்கூறும் முஸ்லீம் தமிழ்த் தலைவர்கள் பயங்கரவாதக் காவிகள் ஒன்று கூடிய போது வீடுகளுக்குள் காணாமல் போயினர்.
பொது பல சேனாவின் பின்புலம் குறித்த ஆதாரங்கள்: