Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை ?

இராணுவ அரசால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள மியான்மர் விடுதலை இயக்கத் தலைவி ஆங் சாங் சூகி இ‌ன்று விடுதலை செய்யப்படுவார் என்று தெரிகிறது.

65 வயதாகும் சூகி மியான்மரில் இருந்த 20 ஆண்டுகளில் சுமார் 15 ஆண்டுகளை சிறையிலேயே கழித்துள்ளார். மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய அவர் மக்களிடையே செல்வாக்கு பெற்றார். இதனையடுத்து இராணுவ அரசு அவரை தொடர்ந்து சிறை வைத்துள்ளது.

இந்நிலையில் அவரது தண்டனை நீட்டிப்பு காலம் நவம்பர் 13‌ஆ‌ம் தே‌‌தியுட‌ன் (இ‌ன்று) முடிவுக்கு வருகிறது. இதனால் அவரை விடுவிக்க வேண்டிய கட்டாயம் மியான்மர் இராணுவ அரசுக்கு ஏற்பட்டுள்ளது.

இவரது விதலை மியான்மார் சர்வாதிகாரச் சட்ட அடிப்படையில் இன்று எனினும், இன்னும் புதிய காரணங்களுக்காக இவரது சிறைத்தண்டனை நீடிக்கப்படலாம் என்றும் இவரது விதலை மியான்மார் சர்வாதிகாரச் சட்ட அடிப்படையில் இன்று எனினும், இன்னும் புதிய காரணங்களுக்காக இவரது சிறைத்தண்டனை நீடிக்கப்படலாம் என்றும் கருத்து நிலவுகிறது.
இந்திய ஆதரவு பெற்ற மியான்மார் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடிவருவது தெரிந்ததே.

Exit mobile version