சேலத்தில் கடை ஒன்றில் பணம் திருடிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று சிறுமிகளைப் பிடித்து கிராம மக்கள்ன் தாக்குதல் நடத்தியுள்ளனர். மின் கம்பத்தில் கட்டி வைத்து இந்த மூன்று குழந்தைகளும் சாரமாரியாக கிராம மக்களின் ஒரு பகுதியினரால் தாக்கப்பட்டுள்ளனர்.கடந்த சனிக்கிழமை இரவு தையல் கடைக்கு 4 சிறுமிகள் வந்தனராம். துணி தைக்கக் கொடுப்பது தொடர்பான விவரங்களை அவர்கள் கேட்டுச் சென்றனராம். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் கடையில் இருந்த ஆயிரம் ரூபாயைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை அடிப்படையாகக் கொண்டு சிறுமிகள் தாக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னரும் சிறுவர் நீதிமன்றத்தில் போலிசார் இவர்களை ஒப்படைத்துள்ளனர்.
வல்லரசுக் கனவில் வாழும் இந்திய அதிகார வர்க்கம் தனது குழந்தைகளைப் பாதுகாப்பதற்குக் கூட நடவடிக்கை எடுப்பதில்லை. இந்தியக் குழந்தைகளின் பாதுகாப்பற்ற நிலை உலக மக்களுக்குச் சொல்லபட வேண்டும்.
அதில் வேறு மிருகங்களைப் பாதுகாக்கிறோம் என்று இந்திய மேட்டுக்குடிகள் உலகம் முழுவதும் உலாவருகின்றன.