சுக்மா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனன் கடந்த மாதம் 20ஆம் தேதி மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
பின்னர் சட்டீஸ்கர் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால்மேனனை மாவோயிஸ்டுகள் நேற்று விடுவித்தனர்.
பசுமை வேட்டையை என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்கள் தாக்கப்படுவதும் அவர்கள்நிலங்கள் அபகரிக்கப்பட்டு அகதிகள் ஆக்கப்படுவதும் நிறுதப்பட வேண்டும் என்றும், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் சுக்மா மாவட்ட ஆட்சியருடன் வந்த தூதுவர்கள் நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது அவர்கள் மாவட்ட ஆட்சியரை மீட்பதில் எந்த வித ரகசிய ஒப்பந்தமும் இல்லை என்றும், மாவோயி்ஸ்ட்டுகளின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படு்ம் என்றும் தெரிவித்தனர்.