Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்ட் போலீஸ் மோதல், பந்த் போராட்டம்.

சத்தீஸ்கரில் ஞாயிற்றுக்கிழமை காலையில் பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் நக்ஸல்களுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பிஎஸ்எப் ஜவான்கள் உள்பட 5 வீரர்கள் உயிரிழந்தனர். நக்ஸல் தரப்பில் உயிரிழந்த 3 பேரின் சடலங்களை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றினர். பி.எஸ்.எப். வீரர்கள், அதிகாரிகள் என மொத்தம் 77 பேர் மற்றும் மாநில போலீஸôர் கூட்டாக இணைந்து கன்கர் மாவட்டத்தில் நக்ஸல்கள் ஆதிக்கம் நிறைந்த வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அங்குள்ள புஸ்கி கிராமத்தின் அருகே தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு பதுங்கியிருந்த சுமார் 100 நக்ஸல்கள் பாதுகாப்புப் படை வீரர்கள் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினரும் அதற்குப் பதிலடியாக துப்பாக்கியால் சுட்டனர். இருப்பினும் 3 பிஎஸ்எப் வீரர்கள் உள்பட 5 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். பிஎஸ்எப் வீரர் ஒருவர் காயமடைந்தார். நக்ஸல் தரப்பில் உயிரிழந்த 3 பேரின் சடலங்கள் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டன. “சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினர் திருப்பி சுட்டதில் நக்ஸல் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் 3 பேரின் சடலங்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டுள்ளனஎன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஜய் யாதவ் தெரிவித்தார். சத்தீஸ்கரில் நக்ஸல் தாக்குதலில் பிஎஸ்எப் வீரர்கள் உயிரிழந்தது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

பந்த்.

போலீஸாரின் 

அத்துமீறல்களுக்கு எதிரான மக்கள் குழுவின்(பிசிபிஏ) முன்னணி தலைவர் மகாதோ கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்குவங்க மாநிலத்தின் 3 மாவட்டங்களில் நாளை பந்த் நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என்று அரசு சொல்கிற பிசிபிஏ தலைவர் உமாகாந்த் மஹதோ மேற்கு மிட்னாப்பூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 27-ம் தேதி போலீசாராம் சுட்டுக்கொல்லப்பட்டார். மஹதோ சுட்டுக்கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புரூலியா, பங்குரா மற்றும் மேற்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் நாளை பந்த் நடத்த மாவோயிஸ்டுகள் அழைப்பு விடுத்துள்ளனர். நேற்று ஊர்மி ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட மாவோயிஸ்டுகள், பந்த்தின்போது ரயில்கள் இயங்கினால் ரயில்வேயின் சொத்துகள் மீது தாக்குதல் நடத்துவோம் என எச்சரித்துச் சென்றதாக அந்த ரயில்நிலையத்தின் மேலாளர் பிமல்குமார் கோஷ் தெரிவித்தார்.தோழ

ர் சமலிதாஸ் கைது.பிகாரில் 

செயல்படும் மாவோயிஸ்ட் அமைப்பின் பெண் தலைவர் சமலி தாஸ் (40) கொல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.கண் சிகிச்சைக்காக சமலி தாஸ் கொல்கத்தா வருவதாக கிடைத்த தகவலின் அடிப்பைடையில் போலீஸார் அவரை கைது செய்தனர்.கொல்கத்தா சிறப்பு அதிரடிப் படை போலீஸாரும் பிகார் போலீஸாரும் இணைந்து இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.

Exit mobile version