Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்ட் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வரும் அரசு : மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி

Aajkaal-3.pmd “ஏழு மாநிலங்களில் மாவோயிஸ்ட் களுக்கு எதிரான போலீசாரின் நடவடிக்கைகளை நிறுத்தினால், அமைதிப் பேச்சுக்கு தயார் ‘ என, மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:
போலீசார், மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்தும் பட்சத்தில், மத்திய அரசுடன் அமைதிப் பேச்சு நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். வன்முறைகளை கைவிட்டு பேச்சு நடத்த வருமாறு மத்திய அரசு எங்களை அழைக்கிறது. ஆனால், மாவோயிஸ்ட் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வரும் மத்திய அரசு, எங்களிடம் வன்முறைகளை கைவிட வேண்டும் கூறுவது கேலிக்கூத்தாக உள்ளது. ஆந்திரா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், ஒரிசா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்குவங்கத்தில் மாவோயிஸ்ட் களுக்கு எதிராக நிறுத்தப்பட்டுள்ள துணை ராணுவப் படைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறவேண்டும். பழங்குடியின மக்கள் மீது, பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்கு பொறுப்பேற்று மத்திய, மாநில அரசுகள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். “பழங்குடியின மக்களின் இதயங்களைக் கவர்வது மட்டுமே பிரச்னைகளுக்கு ஒரே தீர்வு’ என்பது போல் பிரதமர் மன்மோகன் சிங் பேசியிருப்பது வெறும் கண்துடைப்பு.

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்தே பல பிரதமர்கள் இவ்வாறு வார்த்தை ஜாலம் காட்டியுள்ளனர். இருப்பினும், பழங்குடியின மக்களின் வாழ்க்கைத்தரம் இன்னும் உயரவில்லை. இப்பிரச்னைக்கு நிரந்தரமாக ஒரு முடிவு காணவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். மக்களுக்கு ஆதரவாக பேசினால், அது அரசுக்கு எதிராக போராடுவது என, கருதப்படும் பட்சத்தில் போராட்டங்களை தொடர் வதில் என்ன தவறு இருக்கிறது? ”
மேற்கு வங்க மாநிலத்தில், பழங்குடியின மக்களின் நலனை கருத்தில் கொண்டு, 1,500 கோடி ரூபாய் மதிப்பில் திட்டம் தயார்’ என, முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா அறிவித்துள்ளார். இது போன்ற அறிவிப்புகளைக் கேட்டு கேட்டு எங்களுக்கு சலித்து விட்டது. கடந்த 33 ஆண்டுகளாக பழங்குடியின மக்களுக்காக மாநில அரசு என்ன செய்துள்ளது? இவ்வாறு கிஷன்ஜி கூறினார

Exit mobile version