Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டுகள் 48 மணி நேரக் கெடு இன்றுடன் முடிகிறது பதட்டம்.

நக்ஸலைட்டுகளின் எச்சரிக்கையை அடுத்து கடத்தப்பட்ட போலீஸôர் 4 பேரையும் பத்திரமாக மீட்பதற்கு மாநில அரசு துரித நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த மாநில உள்துறை அமைச்சர் நங்கி ராம் கன்வர் தெரிவித்தார். மேலும் அவர் கூறியது: பத்திரிகை வாயிலாக அரசுக்கு நக்ஸல்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அந்தக் கடிதத்தில், தங்களுக்கு எதிரான பாதுகாப்புப் படை நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும், சிறையில் அடைத்துள்ள தங்களது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுவிக்க வேண்டும், போலீஸôரின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த உறுதி அளிக்க வேண்டும், இப்போது கடத்தப்பட்டுள்ள போலீஸôரை மீட்க பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என நக்ஸல்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கடத்தியுள்ள போலீஸôரை விடுவிக்க வேண்டுமானால் தங்களின் இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் 48 மணி நேரத்துக்குள் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர்கள் கெடு விதித்துள்ளனர். பத்திரிகை மூலம் அரசுக்கு வந்துள்ள கடிதம் உண்மையிலேயே நக்ஸல்கள்தான் கொடுத்தனரா என்பது தெரியவில்லை. எனவே, அக்கடிதத்தின் நம்பகத்தன்மை குறித்து உறுதி செய்ய மூத்த போலீஸ் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளேன். அப்படி ஒருவேளை அந்தக் கடிதம் உண்மையிலேயே நக்ஸல்களிடம் இருந்து வந்திருந்தால் அதில் அவர்கள் அளித்திருக்கும் கால அவகாசம் போதுமானதல்ல. நக்ஸலைட்டுகளுக்கு எதிரான பாதுகாப்புப் படை நடவடிக்கையை நிறுத்துவது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து அவசரகதியில் முடிவெடுத்திட முடியாது. ஆனால் கடத்தப்பட்டுள்ள போலீஸôரை விடுவிக்க நக்ஸல்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. நக்ஸல்களுடன் அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க மாநில அரசு தயாராகவே உள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக நக்ஸல்கள் வன்முறையை நிறுத்திக் கொள்ள வேண்டும். எனினும், நக்ஸல்கள் கடிதம் மூலம் விடுத்திருக்கும் கோரிக்கைகள் குறித்து அரசு பரிசீலித்து வருகிறது என்றார் அமைச்சர் நங்கி ராம் கன்வர். சத்தீஸ்கரின் பிஜபூர் மாவட்டத்தின் போபால்பட்டினம் பகுதியில் இருந்து சப்இன்ஸ்பெக்டர் உள்பட 7 போலீஸôரை 8 நாள்களுக்கு முன்னர் நக்ஸல்கள் கடத்திச் சென்றனர். இதில் 3 போலீஸôரைக் கொன்று அவர்களது உடலை சாலையோரத்தில் வீசி விட்டனர். இன்னும் 4 போலீஸôரை ஏதோ ஒரு இடத்தில் பிணைக்கைதிகளாக வைத்துள்ளனர்.

Exit mobile version