Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டுகள் பிரச்னையை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் கருதலாம் என்கிறார் சி.பி.எம் – சீதாராம் யெச்சூரி.

மத்திய இந்தியாவின் காட்டுப்பகுதிகளில் புதைந்துள்ள கனிமங்களைக் குறிவைத்து ஏராளமான பன்னாட்டு நிறுவனங்களுடம் புரிந்துண்ர்வு ஒப்பந்தங்களைச் செய்துள்ளது மத்திய அரசு. இந்த கனிமக் கொள்ளைக்காக கோடிக்கணக்கான பழங்குடி மக்களை காடுகளில் இருந்து அப்புறப்படுத்தி வருகிறது. பஸ்தாரில் தொடங்கி வயநாடு வரை பல மாநிலங்களில் பரவியுள்ள பழங்குடி மக்களைப் பாதுகாக்க மாவோயிஸ்டுகள் போராடிவருகின்றனர். இந்நிலையில் சிபிஐஎம் கட்சியைச் சார்ந்த சீதாராம் யெச்சூரி தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தார். பல கோடி பழங்குடி மக்களின் பிரச்சனையை மாவோயிஸ்டுகள் பிரச்சனையாக சுருக்கிக் கதைக்கிறார் யெச்சூரி. அவர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட வேண்டும் என்றார். இந்நிலையில் மாவோயிஸ்டுகளுக்கும், அரசுக்கும் இடையே மத்தியஸ்தராக மத்திய அமைச்சர் மம்தா பானர்ஜி எப்படி செயல்படமுடியும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சீதாராம் யெச்சூரி கேள்வி எழுப்பினார். தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாட்டில் கலந்துகொண்டு யெச்சூரி பேசியதாவது: நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக நக்ஸலைட்டுகள் உள்ளனர். அவர்களுடன் இணைந்து செயல்படுகிறார் மம்தா. அப்படியிருக்கும் பட்சத்தில் அவர் எப்படி அரசுக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்பட முடியும்? மாவோயிஸ்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக மம்தா பானர்ஜி கூறி வருகிறார். நான் கூட சில ஆண்டுகளுக்கு முன்பு நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடன் பேசியிருக்கிறேன். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அவர்கள் தீவிரவாதத்தை விட்டு விட்டு அரசியல் கட்சி துவங்கிவிட்டனர். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் அந்த முறையை இப்போது கடைபிடித்து வருகின்றனர். அதேபோல இந்தியாவில் உள்ள மாவோயிஸ்டுகளும் வன்முறையைக் கைவிட்டால் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். மாவோயிஸ்டுகள் பிரச்னையை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகவும் கருதலாம். அதே நேரத்தில் அரசியல் பிரச்னையாகவும் கருதி தீர்வு காணலாம். ஏற்கெனவே மோசமான நிலையில் உள்ள பழங்குடி சமூகமும் சுரண்டப்பட்டது. அவர்களது பிரச்னையை மத்திய அரசு எண்ணிப் பார்க்கவேண்டும் என்றார் அவர்.

Exit mobile version