வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இந்திய அரசு முழு வீச்சில் இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளது.. மாநிலப் படைகளோடு சேர்ந்து இராணுவத்தினர் காட்டிற்குள் மாவோயிஸ்ட் இராணுவத்தினரை தேடித் தேடி அழித்து வருகின்றனர். இதற்கு இந்தியா விமானப்படையும் களமிரக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் மீதான இராணுவப் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவோயிஸ்டுகள் ஜார்கண்டில் 24 மணி நேர பந்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.இதனால் மாநிலம் முழுக்க இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 1 மணியளவில் கிரிடித் மாவட்டம், இஸ்ரி என்ற பகுதிக்கு வந்த 12 ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள், அங்கிருந்த தண்டவாளத்தின் 3 பகுதிகளில் தீவைத்து எரித்தனர். இதனால் தண்டவாளத்தின் ஸ்லிப்பர் கட்டைகள் எரிந்து நாசமாகின. மேலும், தும்ரி– கிரிடித் சாலையிலும் மரங்களை வெட்டிப் போட்டு போக்குவரத்தை தடை செய்தனர்.இதுதவிர தும்ரி – கிரான்ட் டிரங்க் சாலையை இணைக்கும் சாலைப் பாலத்தையும் அவர்கள் தகர்த்தனர். வெடிகுண்டுகளை வைத்து இந்தப் பாலத்தை அவர்கள் இடித்தனர். ரயில் தண்டவாளம் எரிக்கப்பட்டதால், சக்திபூஞ்ச் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தி வைக்கப்பட்டது.