மாவோயிஸ்
பெரிய எண்ணிக்கையில் இல்லாவிட்டாலும், மாவோயிஸ்டுகளை நாங்கள் தினமும் பிடித்து கைது செய்து கொண்டுதான் இருக்கிறோம்.அதனால்தான் அவர்கள் தாக்குதல் நடத்துகிறார்கள்.
தங்களுக்கு எதிராக பாதுகாப்பு படைகள் மூலமாக மேற்கொள்ளப்படும் அழுத்தத்தை அவர்கள் உணர்ந்துகொண்டுவிட்டனர்; இது தொடரும்.
மாவோயிஸ்டுகளை பேச்சுவார்த்தைக்கு வர வைப்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையில், சுமார் 1,50,000 க்கும் அதிகமான காவலர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
மாவோயிஸ்டுகள் வன்முறையை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வந்தால் பேச்சுவார்த்தைக்கு அரசும் தயாராகவே உள்ளது. அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளும் நிறுத்தப்படும்.