Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டுகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை- ஏ.கே. அந்தோனி பதில்.

ப்ழங்குடி மக்களுக்காக போராடி வரும் மாவோயிஸ்டுகள் மீது விமானத் தாக்குதல் நடத்துவ குறித்து இந்தியா ஆராய்ந்து வருகிறது சில ஆங்கில ஊடகங்கள் மாவோயிஸ்டுகள் விஷயத்தில் மெத்தனம் காட்டுவதாக அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றது. இந்நிலையில் தேசிய

பாதுகாப்பு அகாதமியின் 118-வது பயிற்சி முடிந்த பிறகு ராணுவத்தில் பணியில் சேரும் விழாவில் பங்கேற்ற அந்தோனி, செய்தியாளர்களிடம் மேலும் கூறியது: நக்ஸலைட்டுகளுக்கு எதிராக ராணுவ வீரர்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் சாதக, பாதக அம்சங்கள் ஆராயப்பட்டு வருகின்றன. இது தவிர பல்வேறு விஷயங்களும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இது தொடர்பாக அரசு தெளிவான முடிவு எதையும் எடுக்கவில்லை. ராணுவ வீரர்களைப் பயன்படுத்துவது தொடர்பாக பல்வேறு விஷயங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ராணுவத்தைப் பயன்படுத்துவது என முடிவு செய்து விட்டால், நக்ஸலைட்டுகளை ஒடுக்கும் பொறுப்பு முழுக்க முழுக்க ராணுவத்திடம் சேர்ந்துவிடும். அரசு எடுக்கும் எந்த முடிவையும் ராணுவத்தினர் ஏற்கத் தயாராக உள்ளனர். எத்தகைய முடிவையும் உறுதியுடனும் மிகுந்த உத்வேகத்துடனும் ராணுவ வீரர்கள் எதிர்கொள்வர். நக்ஸலைட்டுகளுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் இருவேறு கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறுவது தவறு. இது தொடர்பாக ராணுவ தளபதி வி.கே. சிங்குடன் ஆலோசனை நடத்தியதாக வெளியான தகவலும் தவறானது. அவருடனான சந்திப்பு வழக்கமானதாகும். நக்ஸலைட்டுகளால் உருவாகியுள்ள பிரச்னையை சமாளிப்பது குறித்து அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது. நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு ஆகிய இரண்டும் இதில் அடங்கியிருப்பதால் அதீத கவனம் செலுத்தப்படுகிறது என்றார். பயிற்சி முடிந்து ராணுவத்தில் சேரும் வீரர்களிடையே பேசிய அவர், எதிர்காலத்தில் போர் என்பது எதிர்பார்க்காத சமயத்தில், வரையறுக்க இயலாத சூழலில் ஏற்படலாம். வழக்கமான அடிப்படையிலோ அல்லது புதிய உத்திகள் மூலமாகவோ போர் உருவாகலாம். அதற்கு ராணுவ வீரர்கள் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். ராணுவ வீரர்கள் தங்களிடையே தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். பயிற்சி வீரர்களில் சிறப்பாக செயல்பட்ட பி.. வர்மாவுக்கு குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் குறித்து…: காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் உத்தேசம் இல்லை என்று அந்தோனி கூறினார். மனித உரிமை மீறல் விஷயத்தில் அரசு அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கிறது. அதேசமயம் தவறு செய்வோருக்கு புகலிடம் அளிப்போரை அரசு என்றென்றும் மன்னிக்காது என்று குறிப்பிட்டார் அந்தோனி. வடகிழக்கு பிராந்தியத்தில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அதிக எண்ணிக்கையில் சாலை வசதிகள் இங்கு உருவாக்கப்பட்டு வருகிறது. கிழக்குப் பிராந்தியம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருந்தது. முந்தைய காலத்தில் நடந்த தவறுகள் தொடரா வண்ணம் சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார் அந்தோனி. இந்தியாவின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம். எந்த சந்தர்ப்பத்திலும் இதை விட்டுத் தரவே முடியாது என்றும் குறிப்பிட்டார். மும்பை தாக்குதல் சம்பவத்துக்குப் பிறகு, கடலோர மற்றும் தரைவழி ஊடுருவலைத் தடுக்க அரசு தீவிரம் காட்டி வருகிறது. இப்பணிகளில் ராணுவத்தினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version