ஈழத்து தமிழ் இலக்கிய உலகில் தனித்துவமான ஆளுமைச்சுவடுகளைப் பதித்து சென்றவர் கவிஞர் மாவை வரோதயன். அவர் கவிஞர், சிறுகதையாசிரியர், மெல்லிசை பாடல் இயற்றுனர் என பல்துறைசார்ந்த ஆளுமைகளை கொண்டவர். யாவற்றுக்கும் மேலாக வாழ்;க்கை மீதான காதல், நம்பிக்கையுணர்வு, நேர்மை அவரது படைப்புகளுக்கு வளம் சோப்;பதாக அமைந்த்திருந்தது. தமது எழுத்தில் மாத்திரமன்று தமது வாழ்விலும் அத்தகைய பண்புகளை கடைப்பிடித்து நின்றவர். அவரது இழப்பு தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்பட்ட இழப்பாகும். அவரது இறப்பால் துயரும் அவரது குடும்பத்தினர், இலக்கிய நண்பர்கள், மற்றும் ஏனையோருக்கும் புதிய சிந்தனைக் கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் சார்பாக பொதுச் செயலாளர் லெனின் மதிவானம் மானுட நலனுக்கான பதாகையை சுமந்து வந்த பதாகையை அதன் ஆளுமை சிதையாதவகையில் முன்னெடுத்துச் செல்வதே அம்மனிதனுக்காய் நாம் ஆற்றும் புரட்சிகர அஞ்சலியாகும் என தமது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கின்றார்.
தகவல் : புதிய சிந்தனைக் கலை இலக்கியப் பேரவை.