Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவோயிஸ்டுக்களுக்கு ஆதரவு பெருகிவருகிறது : அமரிக்க இரகசிய அறிக்கை

டேவிட் மல்ஃபோர்ட் அனுப்பியுள்ள இரகசிய ஆவணத்தை (ஆவண எண் 47006) விக்கிலீக்ஸ் இணையத் தளத்திடம் இருந்து பெற்று தி ஹிந்து நாளிதழ் வெளியிட்டுள்ளது.

“ஊரகப் பகுதிகளில் தற்போது நிலவும் பழங்குடியினருக்கு எதிரான நிலவுடமையாளர்களின் நலனைக் காப்பாற்ற இந்தியாவின் அரசில் கட்சிகளும், படித்தவர்களும் நினைக்கும் வரை நக்சலைட் பிரச்சனையும், வன்முறையும் தொடரும்” என்று அந்த அறிக்கையில் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

இந்தியாவின் நக்சலைட்டுகள் நேபாளத்தில் தங்களுடைய தோழர்கள் என்ன முடிவெடுக்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கின்றனர். அவர்கள் ஆயுத வழிப் போராட்டத்தைக் கைவிட்டால் இந்தியாவிலும் நக்சலைட்டுகள் ஆயுதப் போராட்டத்தை கைவிடும் சாத்தியத்தை உருவாக்கும் என்று கூறியுள்ளார்.

நக்சலைட்டுகளுக்கு நகரங்களில் வாழும் படித்தவர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளது என்றும், இவர்களின் ஆதரவின்றி, அவர்கள் இந்த அளவிற்கு பரவலாக வளர்ந்திருக்க முடியாது என்றும் மல்ஃபோர்ட் கூறியுள்ளார்.

அதே ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரக விவகார பொறுப்பாளரான இராபர்ட் பிளேக், “காடுகள் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தவும், பழங்குடியின மக்கள் நிலவுடமையாளர்களால் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டிய கடுமையான முடிவுகளை எடுக்க இந்திய அரசு தயங்குகிறது, அதனால்தான் பழங்குடியின மக்கள் நக்சலைட்டுகளை நாடுகின்றனர். பழங்குடியினரில் பெரும்பாலானோர் இந்திய அரசின் மீது நம்பிக்கையற்றவர்களாக உள்ளனர். எனவே அவர்களுக்கு மாவோயிஸ்ட்டுகள் பக்கம் போவதைத் தவிர வேறு வழியற்றவர்களாக உள்ளனர்” என்று கூறியுள்ளார்.

Exit mobile version