Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாவீரர் தினம் – அனுராதபுர சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட தமிழ்க் கைதிகள்

இன்று அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் 65 தமிழ் அரசியல் கைதிகள் 35 வரையான சிறைக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இன்று மாலை 2:30 மணியளவில் சிறைகளிலிருந்து வெளியே இழுத்துவரப்பட்ட கைதிகள் சிறைக்காவலர்களால் காடைத்தனமாகத் தாக்கப்பட்டனர் என ஜே.வி.பி இன் பிளவுற்ற குழுவைச் சேர்ந்த உதுல் பிரேமரட்ன இனியொருவிற்குத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று உங்கள் மாவீரர் தினமா எனக் கேள்வி எழுப்பியவாறே கைதிகளைக் காவலர்கள் தாக்கினர் எனத் தெரியவருகிறது என்றார்.
தாக்கப்பட்ட சிறைக்கைதிகள் பின்னதாக நிர்வாணமாக்கப்பட்டு கொட்டும் மழையில் முழங்காலில் நிற்கவைக்கப்பட்டனர் எனத் தெரிவித்த அவர் “நாம் இலங்கையர்” அமைப்பு இதனை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்தார்.

Exit mobile version