Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாற்று கருத்தாடலுக்கான அமையம் உரையாடலுக்கான அழைப்பு

எமது அமையத்தின் மாதாந்த அமர்வு எதிர்வரும் 06-09-2014 அன்று கொழும்பு-13ல் உள்ள விவேகானந்தா சபை கலந்துரையாடல் அறையில் பி.ப.4 மணி தொடக்கம் 6 மணி வரை நடைபெறும்.

வழமைபோல் இந்த அமர்வில்; கலந்து கொண்டு எமது அமைப்பை பலப்படுத்தி எதிர்கால நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தங்களது ஒத்துழைப்பை நல்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கடந்த அமர்வின் போது அமைப்பின் உத்தியோகத்தர்கள் உட்பட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமை பற்றி எமது அதிருப்தியை தெரிவித்து கொள்வதுடன் எதிர்வரும் அமர்வின் போது இவ்வழைப்பை பெற்றுக்கொள்ளும் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ஏனெனில் இன்றைய சூழ்நிலையில் எமது அமைப்பின் தலையீடு அல்லது குறுக்கீடு என்பது முக்கியத்துவம் உடையதாக இருக்கும் என்று நம்புகிறோம்/

நிகழ்ச்சி நிரல்

1. எமது அமைப்பின் கூட்டங்களுக்கு கலந்து கொள்ளுபவர்கள் பற்றி உறுதியான தீர்மானம் எடுத்தல்.
2. அமைப்பு விதிகளுக்கு அமையவும் இலக்கு கொள்கைகளுக்கு அமையவும் இவ்வமைப்பை கட்டி வளர்ப்பது தொடர்பாக உறுதியான தீர்மானங்களை எடுத்தல்.
3. ஏற்கனவே எமது அமைப்பு முன்னெடுத்துள்ள மொழியுரிமைக்கான நடவடிக்கைகளை அர்த்தமுள்ளதாக முன்னெடுத்தல்.
4. இலங்கையின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக அடக்கப்படுகின்ற தமிழ், முஸ்லீம், மலையகத்தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி பொது இணக்கப்பாட்டுடனான முன் மொழிவுகள், அவற்றை வென்றெடுப்பதற்கான பொது வேலைத்திட்டம் பற்றிய முன்னெடுப்புகள்.
5. எமது அமைப்பின் வேலைத்திட்டதுக்கான நிதியை திரட்டிக்கொள்வதற்கான வழி வகைகள்.

இப்படிக்கு,
இணைச்செயலாளர்,
இ.தம்பையா
0714302909
(thambiahlawassociates@gmail.com)

Exit mobile version