Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மார்ச் 1 நிலப்போராட்டத்தில் அணிதிரள்வீர்! : விவசாயத் தொழிலாளர் சங்கம் அழைப்பு!

தமிழ்நாடு அரசு, 50 லட்சம் ஏக்கர் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை நிலமற்றோருக்கு வழங்கக்கோரியும் நிலமோசடிகளை தடுக்கக்கோரியும் மார்ச் 1ம் தேதி தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டத்திற்கு விவசாயத் தொழிலாளர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் ஜனவரி 9 அன்று திருவாரூரில் மாநிலத் தலைவர் கோ.வீரய்யன் தலை மையில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு, பொருளாளர் ஜி. மணி மற்றும் நிர்வாகிகள் மாநி லக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் கள் வருமாறு:-

தமிழக அரசுக்குச் சொந்த மான சுமார் 50 லட்சம் ஏக்கர் புறம்போக்கு மற்றும் தரிசு நிலங்களை பன்னாட்டு, உள் நாட்டு கம்பெனிகள், முன் னாள், இந்நாள் மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரி கள், நீதிபதிகள் போன்றோர் மூலிகைப்பண்ணைகள், பழப்பண்ணைகள், காய்கறி பண்ணைகள், இறால் பண் ணைகள், கல்லூரிகள், பள்ளி கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு என வளைத்துப்போட்டுள்ளனர்.

இந்த நிலங்களை தமிழ் நாடு அரசு கையகப்படுத்தி நிலமற்ற ஏழை, விவசாயத் தொழிலாளர்களுக்கும், விளிம்பு நிலையில் உள்ள ஏழை, சிறு விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை திமுக அரசு கடந்த 4 வருடங்களாக அம லாக்கவில்லை. கடந்த சட்ட மன்ற தேர்தலிலே, 50 லட்சம் ஏக்கர் நிலங்களை மீட்டு நில மற்றோருக்கு வழங்குவோம் என கொடுத்த வாக்குறுதியை கிடப்பிலே போட்டுவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் மீறி தமிழ்நாடு அரசு, அறக்கட்டளைகளுக் கான சட்டத்தை திருத்தி, பணக்காரர்கள், நிலங்களை ஆக்கிரமிக்க சட்டரீதியான அனுமதி கொடுத்துள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.

திமுக அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், போராட்டங்கள் நடத்தி வலி யுறுத்தியும் கடந்த 4 ஆண்டு களில் 2,11,356 ஏக்கர் வழங்கி யுள்ளதாக அறிவித்து,அதோடு நிறுத்திக்கொண்டது கண் டனத்திற்குரியதாகும்.

மேலும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ஏழை சிறு விவசாயிகள், குத்தகை விவ சாயிகளின் நிலங்கள் மோசடி செய்து அபகரிக்கப்பட்டுள்ளது.

எனவே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத் தின் மாநிலக்குழு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து, மார்ச் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் வட்டாட் சியர் அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளது.

இந்த மாபெரும் மக்கள் போராட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக அமைப்புகளும் ஆதரவு தர வேண்டுகிறோம்.

தமிழகத்தில் உள்ள அனைத்துப்பகுதி விவசாயத் தொழிலாளர்களும், நமது மக் கள் பொருளாதார மேம்பாடு, சமூக மேம்பாடு அடைய உந் துசக்தியாக அமையும் இந்த நிலப்போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள அணிதிரண்டு வாரீர் என அறைகூவல் விடுக் கிறது.

வீட்டுமனை : வெள்ளை அறிக்கை வெளியிடுக!

தமிழகத்தில் சுமார் 30 லட் சத்திற்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனை கிடையாது. பலதரப் பட்ட நிலங்கள் இருப்பதால், அவைகளில் வீட்டுமனை வழங்க சட்ட சிக்கல் உள்ளது. கோவில், மடம், அறக்கட் டளை நிலங்களில் குடியிருப் போர், சாகுபடி செய்வோருக்கு பட்டா வழங்க சட்டம் இடம் தரவில்லை. உபரி நிலங்களை கையகப்படுத்த முடிய வில்லை. இந்திய அரசியல் சாசனம் 9வது அட்டவணைப் படி சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். பஞ்சமி நிலங் களை ஆதிக்க சக்தியினர் வளைத்துப்போட்டுள்ளதை கையகப் படுத்த முடியவில்லை. நீர் வழிப்புறம்போக்கு, நீர்நிலை புறம்போக்கு, சாலை புறம் போக்கு போன்ற நிலங்களில் குடியிருப்போருக்கு மாற்று ஏற்பாடாக வீட்டுமனை வழங்க உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத் தப்பட்ட ஏழை மக்களுக்கு வீட்டு மனை தர அந்தப் பகுதியில் அரசு புறம்போக்கு, தரிசு நிலங்கள் இல்லாத போது, தனியார்நிலங்களை கையகப்படுத்தவும், நிலத்தின் விலை எத்தகையதாக இருந் தாலும் அரசு சாலைகள், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை போன்றவைகளுக்கு எப்படி நில ஆர்ஜிதம் செய்து வழங்கு கிறதோ, அதுபோல இவர்க ளுக்கு வீட்டுமனை வழங்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுபோன்ற பலதரப்பட்ட நிலங்களில் குடியிருப்போ ருக்கு பல சட்ட நடவடிக்கை கள் எடுக்காமல், ஏழை-எளிய மக்களின் வீட்டுமனை பிரச்ச னையை ஒருபோதும் தீர்க்க முடியாது. மேலும் இந்த ஆண்டு, 3 ஆண்டுகளுக்கு மேல் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கப்படும் என அறிவித்துள்ளனர். பல நிலங் கள் உடனடியாக வகை மாற்றம் செய்யப்பட்டு பட்டா வழங்க வேண்டும்.

இதுவரை 7 லட்சம் வீட்டு மனைகள் வழங்கியதாக கூறு வதற்கு தமிழ்நாடு அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். ஒவ்வொரு வட் டாட்சியர் அலுவலகத்திலும் கிராமம் நிலம் சர்வே எண், பயனாளிகள் பெயர், குடும்ப அட்டை எண் உட்பட விபரப் பட்டியல் அந்தந்த வட்டாட் சியர் அலுவலகங்களில் ஒட்ட வேண்டும். காரணம், வீட்டு மனை வழங்கியதாக கூறப்படு வதில் ஏராளமான முறை கேடுகளும், குறைபாடுகளும், லஞ்சம், ஊழல், ஊதாரித்தனம் மலிந்து கிடக்கிறது. அவைகள் தீர்க்கப்படவேண்டும்.

21 லட்சம் கான்கிரீட் வீடுகள் திட்டம்

தமிழக அரசு அறிவித் துள்ள இத்திட்டம் கானல் நீராக உள்ளது. திமுக அரசின் பதவிக்காலம் ஒரு ஆண்டே உள்ளது. முதல்கட்டமாக என ரூ.1800 கோடியில் 3 லட்சம் வீடுகள் கட்ட உள்ளதாக கூறுகிறது. நிர்வாக செலவுகள் போக ஒரு வீட்டுக்கு ரூ.40 ஆயிரம் என்பது எந்த வகை யிலும் போதுமானதல்ல. மண் சுவற்றின் மேல் கான்கிரீட் போடுவதும் மிகவும் ஆபத்தா னதாகும்.

பல லட்சம் தொகுப்புவீடு கள் இடிந்து போயுள்ளன.. இவைகளில் பாதி மற்றும் முழுவதும் இடிந்து போயுள்ள வீடுகளை இடித்துவிட்டு ரூ.1 லட்சத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Exit mobile version