Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மார்க்​சிஸ்ட் கட்​சிக்​காக அனு​ச​ர​ணை​யோ​டும்,​​ நேசத்​தோ​டும் தி.மு.க.​ செய்​த​தை​யெல்​லாம் அக்​கட்சி மறந்​தி​ருக்​காது!:கரு​ணா​நிதி

மார்க்​சிஸ்ட் கட்​சிக்​காக அனு​ச​ர​ணை​யோ​டும்,​​ நேசத்​தோ​டும் தி.மு.க.​ செய்​த​தை​யெல்​லாம் அக்​கட்சி மறந்​தி​ருக்​காது என நம்​பு​வ​தாக முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​துள்​ளார்.​

இது குறித்து அவர் தி.மு.க.​ தொண்​டர்​க​ளுக்கு சனிக்​கி​ழமை எழு​திய கடி​தத்​தில் கூறி​யுள்​ள​தா​வது:​

திண்​டுக்​கல்​லில் மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யி​னர் ஒரு மாநா​டும்,​​ பேர​ணி​யும் நடத்​து​கின்​ற​னர்.​ திரி​புரா மாநில முதல்​வர் பங்​கேற்​கும் அம்​மா​நாட்​டுக்கு போலீ​சார் அனு​மதி தர மறுப்​ப​தா​க​வும்,​​ முதல்​வர் தலை​யிட்டு அனு​மதி வழங்க வேண்​டும் என​வும் மார்க்​சிஸ்ட் செய​லா​ளர் என்.​ வர​த​ரா​ஜன் வெள்​ளிக்​கி​ழமை மதி​யம் எனது செய​லா​ள​ரி​டம் தொலை​பே​சி​யில் பேசி​யுள்​ளார்.​

அச்​செய்​தியை அறிந்த நான்,​​ மார்க்​சிஸ்ட் கட்சி மாநாட்​டுக்​கும்,​​ பேர​ணிக்​கும் அனு​மதி வழங்க காவல்​துறை அதி​கா​ரி​க​ளி​டம் கூறு​மாறு,​​ எனது செய​லா​ள​ரி​டம் கூறி​னேன்.​

அ​தன் பின்,​​ வெள்​ளிக்​கி​ழமை வெளி​யான மார்க்​சிஸ்ட் கட்சி நாளி​தழை படித்​தேன்.​ அதில்,​​ “மதுரை தொகு​தி​யில் மு.க.​ அழ​கிரி வெற்றி பெற்​றது செல்​லாது என அறி​விக்​கக் கோரி,​​ மார்க்​சிஸ்ட் வேட்​பா​ளர் மோகன் உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தி​ருந்​தார்,​​ மோகன் மறைந்​து​விட்​ட​தால்,​​ மார்க்​சிஸ்ட் மாற்று வேட்​பா​ள​ராக மனு செய்த ஏ.​ லாசர் அந்த வழக்கை தொடர்ந்து நடத்​து​வார்” என செய்தி வந்​துள்​ளது.​

வ​ழக்கு நடை​பெ​றட்​டும்.​ நீதி​மன்​றம் தீர்ப்பு கூறட்​டும்.​ தீர்ப்பை ஏற்க தி.மு.க.​ தயா​ராக உள்​ளது.​ ஆனால்,​​ மார்க்​சிஸ்ட் கட்சி தலை​மை​யில் உள்ள சில​ரின் உணர்​வு​க​ளை​யும்,​​ தி.மு.க.​ தலை​மை​யின் உணர்​வு​க​ளை​யும் ஒப்​பிட்​டுப் பார்ப்​ப​தற்​காக சில​வற்றை கூறு​கி​றேன்.​

தி.மு.க.​ ஆட்​சி​யில் இருந்​த​போது,​​ 23.4.1997}ல் மதுரை மாந​க​ராட்சி மார்க்​சிஸ்ட் உறுப்​பி​னர் லீலா​வதி கொலை செய்​யப்​பட்​டார்.​ இது குறித்து லீலா​வதி கண​வர் அளித்த புகா​ரின் பேரில்,​​ மாந​க​ராட்சி தேர்த​லில் லீலா​வ​தியை எதிர்த்​துப் போட்​டி​யிட்ட வள்ளி என்​ப​வ​ரின் கண​வர் கரு​ம​லை​யான்,​​ அவ​ரது சகோ​த​ரர் முத்​து​ராம​லிங்​கம் மற்​றும் 4 பேர் கைது செய்​யப்​பட்​ட​னர்.​

வ​ழக்​கில் குற்​ற​வா​ளி​கள் தி.மு.க.வின​ராக இருந்​த​போ​தும்,​​ அப்​போது ஆளுங்​கட்​சி​யாக தி.மு.க.​ இருந்​த​போ​தும்,​​ அந்த வழக்கு முறை​யாக நடை​பெற்​றது.​ அரசு வழக்​க​றி​ஞ​ருக்​குப் பதில் மார்க்​சிஸ்ட் கட்சி வழக்​க​றி​ஞர் ஆஜ​ரா​க​வும் ஒப்​புக்​கொண்​டோம்.​ நீதி​மன்​றத்​தில் தி.மு.க.வைச் சேர்ந்த குற்​ற​வா​ளி​கள் தண்​டிக்​கப்​பட்​டார்​கள்.​

ஆ​னால் அதற்கு இரண்டு ஆண்​டு​க​ளுக்கு முன்பு,​​ அ.தி.மு.க.​ ஆட்​சிக் காலத்​தில்,​​ குட​வாச​லில் தங்​கய்யா என்ற மார்க்​சிஸ்ட் தொண்​டர் கொல்​லப்​பட்​டார்.​ அந்த வழக்​கிலே குற்​றஞ்​சாட்​டப்​பட்​ட​வர்​கள்,​​ அந்த ஆட்​சி​யில் இருந்த ஒரு அமைச்​ச​ரின் காரி​லேயே பாது​காப்​பாக அழைத்​துச் செல்​லப்​பட்​ட​னர்.​ தி.மு.க.​ ஆட்சி வந்​த​பி​ற​கு​தான்,​​ அந்த வழக்​கி​லும் நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டன.​

மார்க்​சிஸ்ட் கட்சி நண்​பர்​கள் இதை​யெல்​லாம் மறந்​தி​ருக்க மாட்​டார்​கள் என நம்​பு​கி​றேன்.​

2006 சட்​டப்​பே​ரவை தேர்த​லின்​போது செய்​து​கொண்ட உடன்​ப​டிக்​கை​படி,​​ 2007 மாநி​லங்​க​ள​வைத் தேர்த​லில் இந்​திய கம்​யூ​னிஸ்ட் கட்​சி​யின் டி.​ ராஜா​வுக்கு தி.மு.க.​ வாக்​க​ளித்து வெற்றி பெறச் செய்​தது.​ மார்க்​சிஸ்ட் கட்​சி​யு​டன் அத்​த​கைய உடன்​ப​டிக்கை எது​வும் செய்து கொள்​ள​வில்லை.​ எனி​னும் தோழ​மைக் கட்​சி​க​ளி​டம் கொண்​டுள்ள தோழமை உணர்வு கார​ண​மாக,​​ 2008 மாநி​லங்​க​ள​வைத் தேர்த​லில் மார்க்​சிஸ்ட் கட்சி வேட்​பா​ளரை தி.மு.க.​ ஆத​ரித்​தது.​

அக்​கட்சி வேட்​பா​ளர் டி.கே.​ ரங்​க​ரா​ஜ​னின் வேட்பு மனுவை நானே முன்​மொ​ழிந்​தேன்.​ அப்​போது பேட்​டி​ய​ளித்த ரங்​க​ரா​ஜன்,​​ “மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் சார்​பில் தமிழ்​நாட்டி​லி​ருந்து மாநி​லங்​க​ள​வைக்கு தேர்ந்​தெ​டுக்​கப்​பட்ட பி.​ ராம​மூர்த்தி,​​ எம்.ஆர்.​ வெங்​கட்​ரா​மன்,​​ நல்​ல​சி​வம்,​​ இப்​போது நான் ​(ரங்​க​ரா​ஜன்)​ ஆகிய நால்​வ​ருமே தி.மு.க.​ ஆத​ர​வில் தேர்ந்​தெ​டுக்​கப்​பட்​ட​வர்​கள்.​ கூட்​டணி கட்​சி​க​ளி​டையே ஒற்​று​மையை பாது​காக்க வேண்​டும் என்ற உணர்​வோடு முதல்​வர் கரு​ணா​நிதி தேர்​தல்​க​ளுக்​கான ஒதுக்​கீ​டு​களை செய்​துள்​ளார்” எனத் தெரி​வித்​தார்.​

தோ​ழ​மைக் கட்​சி​க​ளோடு,​​ அவர்​கள் தோழ​மை​யாக இல்​லாத காலத்​தி​லும் கூட,​​ நேச உணர்​வோடு,​​ விட்​டுக் கொடுத்து,​​ அனு​ச​ர​ணை​யாக நடந்து கொள்ள வேண்​டும் என்​ப​தற்கு உதா​ர​ண​மாக தி.மு.க.​ நடந்து கொள்​கி​றது.​

அதே நேரத்​தில் மற்ற கட்​சி​கள்,​​ குறிப்​பாக மார்க்​சிஸ்ட் கம்​யூ​னிஸ்ட் கட்சி எப்​படி நடந்து கொள்​கி​றது என்​பதை அக்​கட்சி தொண்​டர்​களே தெரிந்து கொள்ள வேண்​டும் என கரு​ணா​நிதி கூறி​யுள்​ளார்.

Exit mobile version