இவர்கள் அவுஸ்திரேலிய தேசியத்தை நிராகரிக்கும் மார்க்சிஸ்டுக்கள். எமது தேசத்திற்கு எதிரானவர்கள். அவர்களுக்குப் போதிப்பவர் மார்க்சிஸ்டான விரிவுரையாளர் மக்ஸ் லேன். இவர் எமது நாட்டின் விக்ரோரியா பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர். தமது மாணவர்களுக்கு மார்சிசத்தைப் போதிக்கிறார். முதலாளித்துவத்தை அழிப்போம் என்று செயற்படும் சோசலிச மாற்று என்ற அமைப்பைச் சார்ந்தவர்.பல்கலைக்கழகங்கள் மார்க்சிஸ்டுக்களின் இறுதிப் புகலிடமாக மாறியுள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. அரசு இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்.’
இவ்வாறு அவுஸ்திரேலியாவின் தீவிர வலதுசாரியும், சமூகவிரோதியும், தேசிய வெறியர்ருமான அன்றூ போல்ட் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவிலும் ஏனைய மேற்கு ஏகாதிபத்திய நாடுகளிலும் வலதுசாரிகளும், பழமைவாதிகளும் அகதிகளுக்கும் ஏனைய நாடுகளைச் சேர்ந்த வேற்று மொழி, நிறம் மற்றும் கலாச்சாரத்தைச் சார்ந்தவர்களுக்கு எதிராக பொதுவான மக்கள் சிந்தனையை உருவாக்கி வருகின்றனர். இவர்களுடனேயே ராஜபக்சவை அழிப்போம் எனக் கூறும் போலித் தேசியவாதிகள் கூட்டுவைத்துக்கொள்கின்றனர்.