கடந்த நவம்பர் மாதம் கட்டடம் ஒன்றை நிர்மாணிக்கும் நோக்கில் அத்திவாரம் இடுவதற்காக மண் அகற்றப்பட்ட போது முதன் முறையாக மனித எச்சங்கள் இனங்காணப்பட்டன.
இதன்பின்னர், தொடர்ச்சியாக இடம்பெற்ற அகழ்வின் போது, இன்று வரை 79 மனித மண்டையோடுகளும், 78 எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நொவெம்பர் எச்சம் கண்டுபிடிக்கப்பட்டதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் கீழ் சட்டமருத்துவ அதிகாரிகளின் முன்னிலையில் அகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தற்போது, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேரினவாத பாசிச அரசின் ஆட்சியில் மனிதப் பிணங்கள் நாளந்த நிகழ்வாகிவிட்டது. வடக்கிலும் கிழக்கிலும் நாளந்தம் மீட்கப்படும் மனிதப் பிணங்கள் விசாரணையின்றி அழிக்கப்படுகின்றன.