கோட்டே ஸ்ரீ நாகவிகாரையின் பிரதம விகாராதிபதி மாதுளுவேவ சோபித தேரர் பயணித்த காருடன் அதற்;குப் பின்னால் வந்த லொறியொன்று மோதி விபத்து நேர்ந்துள்ளது. இவ்விபத்து பிட்கோடடேயில் வைத்து நடந்துள்ளது. காருக்கு அதிக சேதங்கள் ஏற்பட்ட போதும் பதேரர் காயங்கள் எதுவுமின்றித் தப்பித்துள்ளார்.
சோபித தேரர் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக சரத்போன்சேகாவின் விடுதலை வேண்டி விஷேட பிரார்த்தனை ஒன்றை தனது தலைமையில் ஏற்பாடு செய்திருந்ததுடன் அதற்காகப் புறப்பட்ட வேளையே இந்த விபத்து நடந்திருக்கிறது.
இந்த விபத்துப் பற்றிக் குறிப்பிட்ட சோபித தேரர், காலை முதல் விகாரைக்கு முன்னால் குறித்த லொறி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, அது குறித்து அப்போது நான் சந்தேகப்படவில்லை. ஆயினும் எனக்கு தீங்கு இளைத்து எனது தலைமையில் இன்று நடைபெறவுள்ள பிரார்த்தனையைத் தடுப்பதற்கான சதித்திட்டமாக இந்த விபத்து இருக்கலாம் எனக் குறிப்பிட்டார்.
ஆயினும் சரத்போன்சேகாவின் விடுதலை வேண்டி மாதுளுவேவ சோபித தேரரின் தலைமையில் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக விஷேட பிரார்த்தனை இடம்பெற்றது. இப் பிரார்த்தனையில் 300 பிக்குகள் வரையில் கலந்து கொண்டனர்.