இந்துத்துவா வன்முறைக் கலாச்சாரம் ஒரு சாதாரண மத்தியதர வர்க்கப் பெண் குறித்த சமூக வரம்புகளை நியாயம் என்று கற்பிக்கிறது. பெண் இன்னொரு ஆணோடு பேசுவதற்குக் கூட வரைமுறை போட்டுவைத்திருக்கும் வன்முறையை அது தான் சமூகத்திற்குக் கற்பித்தது. உலகமயம் உருவாக்கிய கலாச்சாரம் இந்துதுவா ஆணாதிக்கத்தோடு சாம்பாராக்கப்பட்டு பெண் முழுமையான நுகர்வுப் பண்டமாக்கப்பட்டாள். கலாச்சார வரம்புகள் மீறப்படும் போது அது தெருவிலே வீசப்படத்தக்க மலிவான நுகர்வுப்பண்டமாகிறது.
முகேஷ், ஜிம்மில் வேலை பார்க்கும் வினய் சர்மா, பழ வியாபாரி பவன் குப்தா ஆகியோர் சிக்கினர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர்
என்று தனது பெருமையைப் பறைசாற்றிக்கொள்கிறது போலிஸ். அச்சம் தரும் அவமானகரமான இந்த வன்முறை இந்தியப் பெண்ணின் அவல நிலையை உலகத்திற்குப் படம் போட்டுக்காட்டுகிறது.
ஆணாதிக்க வெறிகொண்ட இந்த ஆறு மிருகங்களும் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு பாலியல் உறுப்புப் பகுதியில் இரும்புக் கம்பிகளால் தாக்கி தெருவில் வீசியிருக்கிறது. அடக்க ஒடுக்கமாக, குனிந்த தலை நிமிராமல் பெண் அடிமையாக வாழ வேண்டும் எனக் கற்றுக்கொடுத்த இந்துதுவ ஆணாதிக்க அடிமைத்தனமே இந்த மிடுகங்களையும் உருவாக்கி அவர்களது தத்துவதை நடைமுறைப்படுத்தியிருக்கிறது.
இவ்வாறு இந்தியாவில் நாளாந்தம் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படும் நூற்றுக்கணக்கானோர் அதற்கு எதிராகப் போராடவும் சட்டத்தின் முன் கொண்டுவரவும் தயக்கம் காட்டுகிறார்கள். சமூகதால் புறக்கணிக்கப்படுவோம் என்கிறார்கள். கலாச்சாரம் இதன் பின்னும் அவர்களைக் கட்டிப்போடுகிறது. இலங்கையில் பேரினவாதம் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்திய போது அதுபற்றிப் பேசக் கூடாது என்ற சமூக விரோதிகளும் கூட இதே கலாசார வரம்புகளை தாம் நேசிக்கும் இனப்படுகொலை அரசைப் பாதுகாக்கப் பயன்படுத்தினார்கள்.
மாணவிக்கு ஆதரவாக பெண்ணடிமைத்தனத்தின் பெண் அடியாளான சுஷ்மா சுவராஜ் வேறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறார். அரசியல் அழுக்குகள் அறிக்கை விடுக்கின்றன. குற்றவாளிகள் தண்டிக்கப்படலாம் ஆனால் அவர்களை உருவாக்கியவர்கள் தப்பித்துக்கொள்வார்கள்.