மாணவ ஒன்றிய தலைவர் மீதான நேற்றைய தாக்குதலிற்கு இலங்கை அரசே பொறுப்பேற்க வேண்டுமென அங்கு உரையாற்றிய பலரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இவ்வாறு மாணவ ஒன்றிய தலைவர்கள்; மீது தாக்குதல்கள் நடப்பதும் அச்சுறுத்தல்கள் விடுப்பதும் எங்களுக்கு பழகிப்போனவொன்று எனத் தெரிவித்த மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் நாம் வீழ்வோமென அவர்கள் நினைத்தால் அது நடக்கப் போவதில்லையெனவும் தெரிவித்தனர்.
சுமார் 1மணிநேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அங்கு பெருமெடுப்பில் இராணுவத்தினரும், பொலிஸாரும் குவிக்கப்பட்டு மாணவர்களை அச்சுறுத்தும் தோரணையில் நடந்து கொண்டனர், மேலும் இராணுவப் புலனாய்வாளர்கள் கூடி மாணவர்களை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.
எனினும் எந்தவிதமான அச்சுறுத்தல்களுக்கும் அடிபணியாமல் மாணவர்கள் தொடர்ந்தும், வீதியில் ரயர்களைப் போட்டுக் கொழுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
மேலும் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமது சக மாணவன் மீதான தாக்குதலைக் கண்டித்து கண்டண அறிக்கையொன்றையும் மாணவர்கள் வெளியிட்டனர்.