Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மாணவர்களைத் தாக்கிய அரச பயங்கரவாதிகள் : சர்வதேசமயப்பட வேண்டும்

யாழ்பாணப் பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் சிலர் மாவீரர் தினத்தில் விளக்குகளை ஏற்றியதைத் தொடர்ந்து அங்கு அத்துமீறிப் பிரவேசித்த அரச படைகள் மாணவர்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளன. பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அலுவலகம் உடைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான அரச பயங்கரவாதம் அவர்களை மேலும் போராடத் தூண்டியுள்ளது. வகுப்புக்களை பகிஷ்கரிக்கப்போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தொடர்நது இரண்டு நாட்களுக்கு விரிவுரைகள் எதுவும் நடைபெறாதென தீர்மானித்துள்ள பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய வட்டாரங்கள் தெரிவித்தன.
பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 மாணவர்கள் கடும் காயங்களுக்குள்ளாகி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தினுள் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை தொடர்வதாகவும் அப்பகுதியினூடாக பொது மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
பல்கலைக் கழகத்தை சூழ இராணுவத்தினர் நிலை கொண்டுள்ளனர். எதிரி முகாம் ஒன்றை முற்றுகையிடுவது போன்ற சூழல் அங்கு காணப்படுவதாக தொடர்பிலுள்ளவர்கள் தெரிவித்தனர்.
இத்தாக்குதல் குறித்த தகவல்கள் பிரித்தானிய மாணவர் அமைப்பான தேசிய மாணவர் மன்றத்திற்கு இனியொரு சார்பில் தகவல் அனுப்பிவைக்கப்பட்டது. (nusuk@nus.org.uk)
ஏனைய ஐரோப்பிய நாடுகளில் உள்ள மாணவர் அமைப்புக்களுக்கு மாணவர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரான பேரினவாத அரசின் தாக்குதல் என்ற அடிப்படையில் ஏனையோரும் தகவல்களை அனுப்பலாம்.

உலகிலுள்ள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மாணவர்களின் போராட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட வேண்டும்.

Exit mobile version