
பயிற்சிக்கு எதிராக நாட்டின் சகல பல்கலைக்கழகங்களிலும் போராட்டங்கள் நடத்தப்பட உள்ளதாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் சஞ்சீவ பண்டார தெரிவித்துள்ளார்.
நாட்டின் இளைஞர்களை மூளைச் சலவை செய்வதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டி வருவதாகவும் இதற்கு பெற்றோர்கள் துணை போகக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
பொதுவான சமூகத்தின் தனிப்பட்ட நபர்களை விடவும் பல்கலைக்கழக மாணவர்கள் சீரிய ஒழுக்கத்துடன் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலைமைத்துவ பயிற்சியின் மூலம் அரசாங்க ஆதரவு குழுவொன்றை பல்கலைக்கழகங்களில் உருவாக்கிக் கொள்ள முயற்சிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவ முகாம்களில் வைத்து மாணவர்களை இலகுவில் மூளை சலவை செய்து, தங்களது தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக சமூகத்தில் இவ்வாறான இராணுவப் பயிற்சிகள் வெற்றியளிக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.