இதுவரை காலமும் இயக்கங்களினதும், இராணுவத்தினதும் ஆட்சி அதிகாரங்கள் இருந்தபடியால் மக்களுக்கான நல்ல பணிகளை செய்ய முடியாமல் போய் விட்டதாகவும், இப்போதும் இந்த இயக்கங்களின் எச்ச சொச்ச ஆட்சி அதிகாரங்கள் இருப்பதாகவும், இந்த இயக்கங்கள் இருக்கும் வரைக்கும் மக்களுக்கான எந்த பணிகளையும் செய்ய முடியாதெனவும், இந்த நிலைமைகளை மாற்றி அமைத்தாலே நாடும் மக்களும் உருப்படும் எனவும், வடமாகாண முதலமைச்சர் என்று சொல்லப்படுகின்ற க.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
இதேவேளை இந்த இயக்கங்களே மல்லாகம் நீதிமன்றத்தை தீயிட்டு கொழுத்தியதாகவும் விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.
வடமாகாணசபையின் ஏற்பாட்டில் நெடுங்கேணி பிரதேசத்தில் இன்று (17.10.2014) நடைபெற்றுவரும் நடமாடும் சேவையில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த நடமாடும் சேவையில் கூட்டமைப்பின் வடமாகாணசபையின் அமைச்சர்கள் ப.சத்தியலிங்கம், பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா, பா.டெனிஸ்வரன் ஆகியோரும், வன்னி எம்.பிக்கள் செல்வம், வினோ, ஆனந்தன் ஆகியோரும், உறுப்பினர்கள் இந்திரராசா, தியாகராசா ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
விக்கியின் பேச்சுக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் இவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனியாக இருந்தனர்.