பேராசிரியர் சிவசேகரம் எழுதிய ‘இலங்கை தேசிய இனப்பிரச்சினையும் தீர்வுக்கான தேடல்களும்” எனும் நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றுகையிலேயே இக்கருத்தினை அவர் தெரிவித்திருக்கிறார்.
வெளியீட்டு விழாவில் தொடர்ந்து உரையாற்றுகையில், மலையக கல்வி மான்கள், புத்தி ஜீவிகள், சமூக நலன் விரும்பிகள் மலையகத்தைச் சார்ந்த ஏனைய தரப்பினருடன் இணைந்து இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனை சாத்தியமாக்குவதற்கு மலையகத்தில் கல்வி வளர்ச்சி ஏற்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை குறித்து முனைப்பான விவாதங்கள் முன்னெழத் தொடங்கியிருக்கிற ஒரு கால கட்டத்தில் பேராசிரியர் சிவசேகரம் இந்நூலை வெளியிட்டிருப்பதனாது காலப் பொருத்தம் மிக்கதொரு செயலாகும். இந்நூலை வெளியிட்ட புதிய மலையகம் அமைப்பினர் பணியும் விதந்து பேசவேண்டியதொன்றே.
இன்று வலுவடைந்துள்ள இனப்பிரச்சினை குறித்த வாதங்களுக்கு இந்நூல் ஒரு புதிய வலுவினை வழங்கும் என்ற எதிர்பார்ப்பு மேலெழுகிறது.