இலங்கை அரசு இலங்கையின் பாடசாலைகளுக்கு 5 கோடி ரூபாய் பண உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், மலையகப் பகுதிகளில் இவ்வாறு பணத்திற்கு விண்ணப்பித்த பாடசாலைகள் மும்மொழித்திட்டத்தின் பிரதான மொழி சிங்கள மொழி என்ற வகையில் சிங்கள சிங்கள மொழிப்பாடசாலைகளாக அவை மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்ப் பாடசாலை அதிகாரிகளிடம் முன்வைத்து அழுத்தம் கொடுப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன.
பணத்திற்கான முதல் விண்ணப்பம் பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளாலேயே மேற்கொள்ளப்பட வேண்டும். இறுதியில் மலையகத் தமிழ்ப் பாடசாலைகளை சிங்கள மொழிப் பாடசாலைகளாக மாற்றும் அரசின் தந்திரம் என்பதை உணர்ந்து கொண்ட பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் அரசின் பண உதவியை வேண்டாம் என நிராகரிக்க ஆரம்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் குறைவடைய அரசு பணத்தைப் பெற்றுக்கொண்டு ஒப்பந்ததில் கையெழுத்திடுமாறு வன்முறையைப் பிரயோகிக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது.