மலையகத்தில் ஏறத்தாழ இரு சகாப்த காலமாக வாழ்ந்து வரும் மலையக சமூகத்தின் வாழ்வியலை பேணும் நோக்கில், அங்கு வேலையில்லாமல் துன்பப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகளின் சுயதொழில் முயற்சியை மேம்பாடடையச் செய்யவும,; ஊக்குவிக்கவும், அரசாங்கம் காணி பகிர்ந்தளிப்பின் போதும், உதவித் தொகை அல்லது சுயதொழில் முயற்சி கொடுப்பனவு செய்யும் போதும் மலையகத்தில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இது தொடர்பில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர்கள் (அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட) மாகாணசபை உறுப்பினர்கள், அரசியற்கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுக்க வேண்டும,; அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடாத்தி அந்நிலங்களை மலையக இளைஞர் யுவதிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் எனவும் மலையக சிவில் சமூகம் வேண்டுகோள் விடுக்கின்றது.
இளைஞர் கழகங்கள், சமூக தாபனங்கள், இயக்கங்கள் இது தொடர்பில் அக்கறையுடன் செயற்பட்டு நாம் வாழும் இடங்களை செழுமையாக்குவதன் ஊடாக தமது வாழ்வை சுபீட்சமாக இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்த வேண்டும் எனவும் மலையக சிவில் சமூகம் அழைப்பு விடுக்கின்றது.
நன்றி
இப்படிக்கு
செயலாளர்
எஸ். மோகனராஜன் சட்டத்தரணி
மலையக சிவில் சமூகம்