Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலேசிய விமானத்தைச் சூட்டு விழுத்தியது யார்?

malaysia777295 பயணிகளோடு விண்ணில் பறந்த மலேசிய விமாமனம் கிழக்கு உக்ரேயின் பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. மேற்கின் பல்தேசிய வியாபார ஊடகங்களும் உக்ரேயின் நாஸி ஆதரவு அரசாங்கமும் இதனை ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்கள் சுட்டுவிழ்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளன. கிழக்கு உக்ரேயின் பகுதியில் ஐரோப்பிய அமெரிக்க அரச ஆதரவு நிறவெறி மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு அரசியல் குழுக்கள் போராடிவருகின்றன. இன்று கம்யூனிச எதிர்ப்பு சர்வாதிகார நாடாக மாற்றமடைந்துள்ள முன்னை நாள் சோவியத் ஒன்றியத்தின் தலைமை நாடான ரஷ்யா தனது நலனுக்காக இப்போராட்டங்களுக்குள் மூக்கை நுளைத்துள்ளது உண்மையே.

எது எவ்வாறாயினும் பெரும்பாலான உழைக்கும் மக்களும் கிழக்கு உக்ரையின் ரஷ்ய சமூகத்தைச் சேர்ந்தவர்களும் நிறவெறி-கம்யூனிச எதிர்ப்பு நாசி அரசுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ சதிப் புரட்சி மூலம் ஆட்சியைக் கையகப்படுத்திய நாசி அரசிற்கு ஆதரவு வழங்கி வருகின்றன.

மூன்று மாதங்களின் முன்னர், சண்டை நடந்துவரும் பகுதியில் தமது கட்டுப்பாட்டிற்கு உட்பட்ட விமானப் பிரதேசமாக அமெரிக்க மத்திய விமானச் சேவை நிர்வாகம் -US Federal Aviation Administration (FAA) – அறிவித்திருந்தது. அதன் பின்னரும் பயணிகளின் விமானங்கள் போர் நடைபெறும் வழியாகச் சென்று வந்தன. இவற்றை யாரும் சுட்டுவிழுத்தியதில்லை. எந்த விமானமும் விபத்திற்கு உள்ளானதில்லை. ஆனால், கிழக்கு உக்ரையினுக்குள் தாழ்வாகப் பறக்கும் இராணுவ விமானங்களை போராட்டக் குழுக்கள் சிறியரக ஆயுதங்களால் சுட்டு விழுத்தியுள்ளன. இதனால் நாசி ஆதரவு அரசிற்கான ஆயுதம் மற்றும் உணவு வழங்கல் அரசிற்கு இலகுவான காரியமாக இருந்ததில்லை.

சுட்டு விழுத்தப்பட்டுள்ள மலேசிய 777 விமானம் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்திருக்கிறது. ஏவுககணைத் தளங்கள் இல்லாத கெரில்லாப் பாணித் தாக்குதல்கள் நடத்தும் உக்ரையின் போராட்டக் குழுக்கள் இத் தாக்குதலை நடத்தியதாக ஊடகங்களும் உக்ரேனிய அரசும் பிரச்சாரம் செய்து மக்களை மந்தைகளாக்கியுள்ளன.

தவிர, கிழக்கு உக்ரேயின் பகுதியில் மலேசிய விமானத்தைச் சுட்டுவிழுத்தினால் போராளிக் குழுக்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கப்போவதில்லை. ஆனால், அப்பாவிப் பயணிகளைக் கொலைசெய்துவிட்டார்கள் என இழந்த செல்வாக்கை அனுதாப அலைகளிலிருந்து அமெரிக்காவும் உக்ரையுனும் மீளப் பெற்றுக்கொள்ளும்.

இதுவரையில் வரலாறு காணாத தோல்வியை உக்ரையினில் தழுவியுள்ள அமெரிக்க அரசு பயணிகளின் உயிரைப் பணயமாக வைத்துது அரசியல் காய்நர்த்த முயற்சிக்கிறது என்று பரவலான மாற்று ஊடகங்கள கருத்துத் தெரிவிக்கின்றன.

Exit mobile version