வடக்கில் உள்ள மக்கள் தமது வீடுகளில் திருமண வைபவங்களையும், மரண சடங்குகளை சுதந்திரமாக செய்து கொள்ள
போர் முடிந்த போதும், வட பகுதி மக்கள் எவ்விதமான சுதந்திரமும் இன்றியே வாழ்கின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.
எனினும் விடுதலைப்புலிகள் அமைப்பில் தலைவர்களாக இருந்தவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கே.பி. என்பவர் பிரபாகரனுக்கு பின்னர் தலைவராக இருந்தவர். அவர்தான் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வெடி மருந்துக்களை கொண்டு வந்தவர்.
புலிகள் அமைப்பு, இலங்கையில் வெடிக்க வைத்த குண்டுகள், பயன்படுத்திய துப்பாக்கிகள், தோட்டக்கள் என அனைத்தையும் கே.பியே இலங்கைக்கு அனுப்பி வைத்தார்.
மலேசியாவில் கைது செய்யப்பட்ட அவர் கொழும்புக்கு அழைத்து வந்த பின்னர் நேரடியாக கோத்தபாயவின் வீட்டிற்கே கொண்டு செல்லப்பட்டார். மரண பயத்தில் கோத்தபாயவின் வீட்டுக்கு சென்ற அவர், அங்கிருந்து திரும்பும் போது எந்த அச்சமும் இல்லாதவராக வெளியேறினார்.
கே.பியிடம் எத்தனை கப்பல்கள் இருக்கின்றன? வங்கிகளில் எவ்வளவு பயணம் இருக்கின்றது?. எனக்கு எவ்வளவு பயணத்தை தர போகிறீர் என்று கேட்டதும் கே.பிக்கு பயம் இல்லாமல் போய்விட்டது.
தமிழ் மக்கள் இவை குறித்து என்ன நினைப்பார்கள்?. கே.பி மற்றும் தயா மாஸ்டர் போன்றவர்களை ஒருவிதமாக நடத்தும் அரசு, தமிழ் மக்களை வேறுவிதமாக நடத்துகிறது. தயா மாஸ்டர் இன்று வெளியில் இருக்கின்றார்.
விடுதலைப்புலிகளினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருக்க குற்றத்திற்காக சிறையில் இருப்பதாக வெலிக்கடையில் இருக்கும் கைதிகள் என்னிடம் தெரிவித்தனர்.
அடையாள அட்டையில் கையெழுத்திட்ட தயா மாஸ்டர் வெளியில் இருக்கின்றார். அதனை வைத்திருந்த இளைஞர்கள் உள்ளே இருக்கின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இவற்றைத் தமிழர்கள் யாராவது கூறியிருந்தால் அவர்கள் இனவாதிகள் என்று தமிழர்கள் மத்தியிலிருந்தே கூக்குரல் எழுந்திருக்கும். செல்லாத காசு போன்ற வடக்கு மாகாண சபையில் முதல்வர் பதவி பெற்றுக்கொண்டு மக்கள் போராட்டங்களையும் எழுச்சிகளையும் அழிக்க முயலும் விக்னேஸ்வரனோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ பேசத் துணியாதவற்றை மாத்தறையில் நடந்த கூட்டம் ஒன்றில் ஜே.வி.பி இன் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.