Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் UNHCR அடையாள அட்டை வைத்திருந்தனர்

mandated-regugee-cardவிடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் (UNHCR) அடையாள அட்டையை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக சொந்த நாட்டிற்குத் திரும்ப அச்சம் கொண்டுள்ளவர்கள் என்ற அடிப்படையில் அன்னிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரலாம் என்ற ஜெனீவா ஒப்பந்தத்தில் 1962 ஆம் ஆண்டு மலேசிய அரசு கைச்சாத்திட்டுள்ளது. இந்த அடிப்படையில் மலேசிய அரசு மூவரையும் சர்வதேசச் சட்டங்களுக்கு விரோதமாக நாடுகடத்தியுள்ளது.

இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் பேச்சாளர் யாந்தே ஸ்மாயில் தெரிவித்துள்ளார்.இதே வேளை மலேசியாவிலிருந்து கொழும்பிற்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் 3 பேரும் திங்கள்கிழமை இரவு கொழும்பு வந்து சேர்ந்தனர். கொழும்பில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யபட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

தமது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக இலங்கைப் பயங்கரவாத அரசிடமிருந்து தப்பித்து அன்னிய நாட்டில் தஞ்சம் கோரியவர்களைத் திருப்பியழைக்கும் பொறுப்பும், பாதுகாக்கும் பொறுப்பும் என்ற UNHCR அமைப்பையே சாரும்.

RM20,176.53 என்ற சட்டத்தின் கீழ் இவர்கள் தடை செய்யப்பட்டதுடன் மேலும் 24 நாடுகளுக்கு தடை உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள்  UNHCR  இன் உதவியுடன் இலங்கைக்கு  அனுப்பப்பட்டனர் எனவும் மலேசியப் போலிஸ் தெரிவித்ததாக இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சகம் செய்திவெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

இது குறித்து இந்த அமைப்பிடம் நியாயம் கோர விரும்புவோர் கீழ் வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ளலாம்:

UNHCR சுவிஸ் அலுவலகம்: +41 22 739 8111
UNHCR பிரித்தானிய அலுவலகம்:+44 20 7759 8090

நாடுகடத்த்ப்பட்ட அகதிகள் கொழும்பில் கைது:புலிக்கொடி அமைப்புக்கள் எங்கே?

உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அவலத்தில்:புலம்பெயர் அமைப்புக்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

Exit mobile version