Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மற்றொரு அழிவைத் திட்டமிடும் சம்பிக்க ரணவக்க: சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை?

chambikaமன்னாரில் கிடைத்துள்ள இயற்கை எரிவாயு மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றை 2020ஆம் ஆண்டு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவுள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (27) ஆரம்பமான மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பெற்றோலியத்துறையின் விநியோகம், தரம், விலை ஆகியவற்றில் காணப்படுகின்ற பிரச்சினை குறித்து ஆராய்வதற்கான மாநாடு கொழும்பில் இன்று (27) நடைபெற்றது.

இலங்கை மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த மாநாட்டில் பெற்றோலிய துறையின் எதிர்காலம் குறித்து மின்சக்தி எரிசக்தி அமைச்சர் பட்டலி சம்பிக்க ரணவக்க கருத்து தெரிவித்தார்.

இந்தியப் பிரதமரும் இனக்கொலையாளியுமான நரேந்திர மோடி யாரும் தேடுவாரற்றுக் கிடந்த மன்னாரிற்குப் பயணம் செய்தமையின் பின்னணியை ஆராய்ந்தால் அப்பிரதேசத்தின் கடற்படுக்கையில் இந்திய அரசின் கவனம் தெரியவரும்.

சுன்னாகத்தில் ஏற்பட்ட பேரழிவிற்கு சம்பிக்க ரணவக்கவும் பொறுப்பு. தமது அடையாளங்களை வைத்து வியாபாரம் நடத்தும் புலம்பெயர் அமைப்புக்களும், தேசியத்தின் பெயரால் பிழைப்பு நடத்தும் அமைப்புக்களும் சுன்னாகம் பேரழிவு தொடர்பான குரல்கொடுக்கவில்லை. சம்பூரில் இரண்டாயிரம் ஏக்கர் நிலம் அனல் மின் நிலையத்திற்காகச் சுவீகரிக்கப்பட்டுள்ளது. ஏழாயிரம் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். சம்பூரை மையமாக வைத்துத் திருகோணமலையும், மன்னார் கடற்படுக்கையை ஆதாரமாகக் கொண்டு அப்பிரதேசமும் சுன்னாகம் போன்று அழிக்கப்படும். இவை அனைத்தையும் மக்கள் போராட்டமாக முன்னெடுக்க பிழைப்புவாதிகள் யாரும் தயாரில்லை.

இன்னும் சில வருடங்களில் வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்கள் சிறுபான்மை ஆக்கப்பட்டுவிட்டால் சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை எழுவதைத் தவிர்க்கலாம் என்பது இலங்கை இந்திய அரசுகளின் திட்டம்.

அதுவரையான இடைக்காலத்தை தமிழ்த் தலைமைகள் ‘தேசியம்’ என்ற பெயரில் கடத்தி இலங்கை அரசிற்கு உதவிபுரியும். சுய நிர்ணைய உரிமைக்கான கோரிக்கை முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் இலங்கை முழுவதும் பல்தேசிய நிறுவானங்களின் சொர்க்க புரியாகவும், அமரிக்க ஏகாதிபத்தியத்தின் தெற்காசியப் பாதுகாப்பு அரணாகவும் செயற்படும்.

Exit mobile version