Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மற்றுமோர் அமரிக்க இராணுவ ஒப்பந்த்தம் : மக்கள் பலத்த எதிர்ப்பு.

பிரேக், ஜூலை 9-

செக். குடியரசு மக்களின் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் அமெரிக்கா, செக். குடியரசு நாடுகளுக்கு இடையே அமெ ரிக்க ஏவுகணை பாதுகாப் புத் திட்டத்தின் ஒரு பகு திக்கான ஒப்பந்தம் கையெ ழுத்தானது. ஏவுகணை பாதுகாப்பு நிறுவப்பட் டால், ராணுவரீதியில் எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப் போவ தாக ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஈரான் போன்ற நாடு களின் ஏவுகணை தாக்கு தலை எதிர்கொள்வதற்காக இப்பாதுகாப்பு கேடயம் அமைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால், ரஷ்யா இதைக் கடுமையாக எதிர்த்துள்ளது. ரஷ்ய எல்லை அருகே ஏவு கணை பாதுகாப்பு வியூ கங்கள் நிறுவப்பட்டால், அரசியல் நடவடிக்கை களால் அல்லாது, ராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.

ஐரோப்பாவில் உள்ள அமெரிக்கக் கூட்டாளி களை அச்சுறுத்த ரஷ்யா முயல்வதாக பெண்டகன் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், அது நடக்காது என்று பெண்டகன் செய் திப் பிரிவு செயலாளர் ஜியாப் மில்லர் ஸ்டில் கூறியுள்ளார். ஏவுகணை பாதுகாப்பு கேடயம் ரஷ் யாவுக்கு எதிரானதில்லை என்று ரஷ்யாவிடம் விளக் கப்போவதாக வெள்ளை மாளிகை கூறியுள்ளது. ஏவுகணைப் பாதுகாப்பு கேடயம் நிறைவேறினால், ரஷ்ய ஏவுகணைகள் ஐரோப் பிய நாடுகளைக் குறிவைத்து நிறுத்தப்படும் என்று முன் னாள் ரஷ்ய ஜனாதிபதியும் இன்றைய பிரதமருமான விளாடிமிர் புடின் கூறியி ருந்தார்.

ஏவுகணை பாதுகாப்பு கேடயம் குறித்து ரஷ்யா அளித்த முன்மொழிவு களை அமெரிக்கா நிராக ரித்துவிட்டது என்று ரஷ்யா குற்றம் சாட்டுகிறது. போலந்தில் 10 இடை மறிப்பு ஏவுகணைகளை நிறுத்த அமெரிக்கா விரும் புகிறது. அமெரிக்க ஏவு கணைத் தளத்தை போலந் தில் நிறுவ அமெரிக்கா விரும்பினால், அதற்கு கைம் மாறாக போலந்தின் ராணு வம் மற்றும் வான்வெளிப் பாதுகாப்பை நவீனப்படுத்த பலநூறு கோடி டாலர் களை அமெரிக்கா அளிக்க வேண்டும் என்று கூறிய தால் அத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version