Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மறைத்து உண்ட குற்றச்சாட்டுக்கு லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் இளைஞர் மறுப்பு!

இலங்கையில் யுத்தம் உச்சகட்டத்தை எட்டியிருந்த சமயத்தில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞர், மெக் டோனால்ட்ஸ் பர்கர்களை சாப்பிட்டதாக பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் வெளியிட்ட செய்திகளை சம்மந்தப்பட்ட இளைஞர் மறுத்துள்ளார்.

இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தமிழோசையிடம் தெரிவித்தார்.

உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் பர்கர்களை சாப்பிட்டதை போலீசின் ரகசிய கேமராக்கள் படம்பிடித்துள்ளதாக போலீஸ் வட்டாரங்களை மேற்கொள்காட்டி பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

லண்டனில் ஏப்ரல் மே மற்றும் ஜூன் மாதங்களில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரி்க்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்கள் இலண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நடைபெற்றது. இந்தப் போராட்டங்களின் ஒரு பகுதியாகத்தான் உண்ணா விரதப் போராட்டமும் நடைபெற்றது.

இந்தப் போராட்டங்களுக்கு பாதுகாப்பளிக்க பிரிட்டிஷ் போலீசார் சுமார் 7 மில்லியன் பவுண்டுகளை செலவிட்டதாக கூறப்படுகிறது.

BBC.

Exit mobile version