இவை அனைத்தும் சில தனிமனிதர்களின் தவறுகள் அல்ல. அமரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் முன்கூட்டிய திட்டமிடலின் அடிப்படையிலேயே இவை நிகழ்தப்படுகின்றன.
லிபியாவில் வளங்களை மேற்கு நாடுகளின் பல் தேசிய வியாபார நிறுவனங்கள் ஆக்கிரமிப்பதற்காக ஊடகங்கள் அனைத்தும் இணைந்து மாபெரும் பொய்ப் பிரச்சாரத்தையே நடத்தி முடித்திருக்கின்றன.
இஸ்லாமிய அடிப்படை வாதிகளை உருவாக்கி அவர்களை உலகம் முழுவதும் உலாவவிட்ட ஏகாதிபத்தியங்கள் அதே அடிப்படைவாதத்தை முன்வைத்து மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்து அங்கெல்லாம் இனப்படுகொலைகளை நடத்தியிருக்கின்றன. ஐ.நா இன் துணையோடு ஈராக்கில் லட்சக் கணக்கான குழந்தைகள் மருத்துவ வசதியின்றிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
நான்கு வருடங்களின் பின்னர் மேற்கின் ஊடகங்கள் ஐ.நா இல் நடைபெற்றது தற்செயலான தவறு என்று புனைவுகளைக் கட்டவிழ்த்துவிடுகின்றன. இந்தியா, சீனா, மேற்கு நாடுகள் போன்ற அதிகார அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து நடத்திய இனப்படுகொலை சமரசமும் விட்டுக்கொடும் இல்லாத மக்கள் போராட்டத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்று கற்றுத் தருகின்றது.
உலகின் ஒடுக்கப்படும், போராடும் மக்களோடு இணைந்துகொள்வதன் ஊடாகவே விடுதலையை வென்றெடுக்க முடியும் என சொல்லித் தருகின்றது.