Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மர்ம மனிதனைப் பிடிக்கச் சென்ற 16 வயது மாணவன் கொல்லப்பட்டார்

கண்டி, தலாது ஓய, குருதெனியவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கிராமத்தில் புகுந்த மர்ம மனிதனொருவனைப் பிடிப்பதற்காக இரு குழுக்களாகப் பிரிந்து தேடிய கிராமத்தவரிடையே இம் மாணவர் எதிரே வந்ததால் ஒரு குழுவில் மதுபோதையிலிருந்த ஒருவரால் இவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குருதெனிய பிரதேசத்தில் வசிக்கும் தினுல தம்திலக ரத்னாயக்க எனும் பாடசாலை மாணவனே இச் சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார். சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு மேலதிக விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Exit mobile version