இவ்வாறான ஆர்ப்பாட்டங்கள் மத்தியதர வர்க்கப் பெண்களைப் பாதுகாப்பதற்கான சில நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும். அதே வேளை பல நூற்றுக்கணக்கான பெண்கள் மீதான வன்முறைகள், உதரணமாக போலிஸ் கிராமங்களுக்குச் சென்று குழுக்களாக பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதும், கிராமங்களை எரித்துச் சாம்பலாக்குவதும் போன்ற நடவடிக்கைகள் பேசப்படுவது கூட இல்லை என்று குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எது நடந்தாலும் ஒடுக்கப்படும் தலித் பெண்கள் தொடர்ந்தும் ஒடுக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.
5000 பெண்களைக் காணவில்லை : டெல்லியில் போராடுவார்களா?
பிந்திய தகவல் : பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கல்லூரி மாணவி டெல்லி சபதர் சிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு எடுத்துசெல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அங்கும் சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது உடல் விமானம் மூலம் இன்று அதிகாலை 4 மணி அளவில் டெல்லி கொண்டுவரப்பட்டது.