அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் சிவசங்கர் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டதாகவெளியான தகவல்களைத் தொடர்ந்து பல்வேறு முரணான செய்திகள் வெளியாகின. அப்பாவியான மருத்துவர் சிவசங்கருக்கு என்ன நடந்தது என்பது குறித்து இன்னும் எந்த தகவல்களும் இல்லை. இழந்த செல்வாக்கை மீளமைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் தொடர் உண்ணாவிரதத்தை அறிவித்திருக்கும் நிலையில் சிவசங்கர் குறித்தோ, கைதான பல்கலைக் கழக மாணவர்கள் குறித்தோ இதுவரை எந்தத் தகவல்களும் இல்லை. மாணவர்கள் கைதானமைக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொய்யான தகவல்களை வெளியிட்டிருந்தமை குறித்து முன்னதாக இனியொருவில் செய்தி பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.