Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரண தண்டனை எதிர்ப்பு கருத்தரங்கம்

இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நியாயத்தை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் வழக்குரைஞர்கள் பாசறை சென்னையில் கருத்தரங்கம் நடத்துகிறது.

சென்னை, தியாராயர் நகரில் உள்ள சர் பிட்டி தியாகராசர் அரங்கில் சனிக்கிழமை மாலை 6 மணிக்குத் தொடங்கும் இந்தக் கருத்தரங்கில், தமிழ்நாட்டின் பிரபல வழக்குரைஞர்கள் ‘தடா’ சந்திரசேகர், பா.ப.மோகன் முதன்மை உரை நிகழ்த்துகின்றனர்.

வழக்குரைஞர்கள் நெல்லை சிவக்குமார், நல்லதுரை, மணி செந்தில், அறிவுச்செல்வன், பிரபு என்கிற அலைமகன், மருதநாயகம், ரூபன், ஈரோடு ஜெயராசு, ஆனந்தராஜ், முத்துக்குமார், திருச்சி பிரபு, கோட்டைக் குமார், அருள், டெல்லி பாபு, விசயராகவன், கயல்விழி, நெல்லை கரிகாலன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர்.

Exit mobile version