Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரணதண்டனை வழங்கியிருக்கத் தேவையில்லை : மன்னிப்புச் சபை

mayuranபோதைப்பொருள் கடத்தல் குற்றவாளிகளுக்கு  நிறைவேற்றப்பட்ட மரணதண்டனைக்கு பதிலாக மாற்று வழியில் தண்டனையை வழங்கி இருக்கலாம் என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்துக்கான சர்வதேச மன்னிபு சபையின் இயக்குநர் Rupert Abbott மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

சர்வதேச அளவில் இந்தோனேசிய அரசாங்கத்துக்கு இவ் மரணதண்டனையை ரத்துச் செய்யுமாறு கேட்டபோதிலும் இந்தோனேசிய அரசு குறிக்கப்பட்ட நாளில் இக் குற்றவாளிகளுக்கான தண்டனையை வழங்குவோம் என உறுதியாக தெரிவித்திருந்தது.

இவ்வாறு இந்தோனேசிய அரசு தனது உறுதியில் இருந்து சற்றும் தளராது தண்டனையை நிறைவேற்றியமை என்பது மனித உரிமை மீறல் செயலே என தெரிவித்திருந்தார்.

போதைபொருள் கடத்தல் என்பது தண்டனைக்குரியை குற்றமாக இருப்பினும் அதற்கான தண்டனை மரண தண்டனை என்பது கொடூரமான தண்டனையே. அக்குற்றத்திற்கான தண்டனை வழங்குவதற்கு மரணதண்டனையை விடுத்து வேறு வழியில் அக்குற்றவாளிகளை தண்டித்திருக்கலாம் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

இக்குற்றவாளிகள் சிறைவாசம் இருந்தபோதில் இவர்களுக்கென வாதாடிய சட்டத்தரணிகள் தெரிவித்த கருத்துக்களை இந்தோனேசிய அரசு செவிமெடுக்க தயார்நிலையில் இல்லாது இவர்களுக்கான தண்டனையை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருந்தது,

மேலும் இக்குற்றவாளிகளுள் ஒருவரான நைஜீரியாவைச் சேர்ந்த ரொட்ரிகோ குலார்தே என்பவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்த போதிலும் அவருக்கான மரண தண்டனையை வித்தித்தமை இந்தோனேசிய அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் செயல் என Rupert Abbott தெரிவித்திருந்தார்.

2013 ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் போதைப்பொருள் உற்பத்தி சாதனை படைத்துள்ளது
வங்கிகளை அழிவிலிருந்து மீட்டெடுத்த போதைப்பொருள் குற்றவாளிகள் : நிவேதா நேசன்
Exit mobile version