Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரணதண்டனை எதிரொலி – இளம்பெண் தீக்குளித்து மரணம் : பழ.நெடுமாறன் வேண்டுகோள்!

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன். முதல்வரிடம் முறையிடுவது, நீதி மன்றத்தில் வாதாடுவது, மக்களை திரட்டிக் குரல் கொடுப்பது ஆகிய வழிகளில் நாம் இணைந்து ஒன்று பட்டுப் போராடுவதின் மூலமே மூவரின் உயிர்களை காக்க முடியும். நம்மை நாமே அழித்துக் கொள்வதின் மூலம் அதை செய்ய முடியாது என்பதை உணருமாறு அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன். 3 உயிர்களை காக்கத் தொடர்ந்து போராடுவதற்கு பதில் நமது உயிர்களை அழித்துக் கொள்வது என்பது நமது நோக்கத்திற்கே முரணானதாகும். இத்தகைய செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென வேண்டிக் கொள்கிறேன்.

தவிர, ஜெயலலிதாவைத் தலையிடுமாறு மரணமடைந்த பெண் இறப்பதற்கு முன்னர் எழுதிவைத்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். அனீதிக்கு எதிராக இப் பெண்ணின் மரணத்திற்கு மரணதண்டனையை மௌனமாக அங்கீகரிக்கும் ஜெயலல்லிதாவும் ஒரு காரணம்.

Exit mobile version