Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மரணச் சடங்கைக்கூட நடத்தமுடியாத விக்கி ஜனதிபதி ஆக ஆசைப்படுகிறார்

Wickiமக்கள் எவ்வாறான விழாக்களையும் நினைவு நாட்களையும் முன்னெடுக்கலாம் என்பதை தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களில் இராணுவமே முடிவு செய்கிறது. நாட்டின் ஆட்சியதிகாரத்திற்குக் கட்டுப்பட வேண்டிய இராணுவம் சிவில் நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. சாதாரண மரணச் சடங்குகளைக் கூட எவ்வாறு நடத்த வேண்டும் என்பதை இராணுவமே தீர்மானிக்கிறது. வன்னிப் படுகொலைகளின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவாக எந்த நிகழ்வுகளிலும் பங்குபற்றக் கூடாது என இலங்கை இராணுவம் அறிவுறுத்தியுள்ளது. யாராவது உறவினர்கள் போரில் இறந்திருந்தால் பொது இடங்களில் அதனை நினைவுகூரக் கூடது என அறிவித்துள்ளது.

இராணுவத்தின் இந்த முடிவை ஏ,எப்.பீ செய்தி நிறுவனத்திற்கு இராணுவப் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடக்கில் ஊதிப்பெருப்பிக்கப்படும் சி.வி.விக்னேஸ்வரன் மரணச்சடங்குகளையும் நினைவு நாட்களையும் நடத்துவது எப்படி என்பதைக்கூட தீர்மானிக்க முடியாத நிலையில் உள்ளார். அங்கு நடைபெறுவது இராணுவ ஆட்சியே. அதனை விக்னேஸ்வரன் அங்கீகரித்து அதன் அடிமை நிர்வாகியாகவே செயற்படுகிறார். இந்த அவமானகரமான நிலையில் ஜனாதிபதி வேட்பாளராக வேறு அறிவிப்பதற்கு அவரின் சுற்றுவட்டங்கள் முனைகின்றன.

நினைவு நாட்களைக் கொண்டாடுவதற்குக் கூட அனுமது வழங்க முடியாத வெற்றுக் காகிதமாக விக்னேஸ்வரன் பதவியிலிருப்பது போலி விம்பத்தை வழங்குவதற்காக மட்டுமே. விக்னேஸ்வரனும் பரிவரங்களும் பதவி விலகினால் மக்கள் போராடுவதற்குத் தம்மைத் தகவமைத்துக்கொள்வார்கள்.

Exit mobile version