இந்திய இலங்கை தலைவர்கள் இடையில் சுமார் அரை மணிநேரத் அதிகாரபூர்வ பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இதன் போது 13வது அரசியல் சாசனத் திருத்தத்தை விரிவுப்படுத்துவது, செனட் சபை அமைக்கப்படுவது, அந்த சபையின் பணிகள், வடக்கு கிழக்கு பிராந்தியத்தின் புனரமைப்பு பணிகள் மற்றும் மீள்க்குடியேற்ற விவகாரங்கள் பற்றி பேசப்பட்டுள்ளன.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் அரசியல் கட்சிகளுடன் மாத்திரமல்லாது, நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, இந்திய பிரதமரின் கூறியுள்ளார்.
அதேவேளை அரசாங்கம் முன்வைக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளுமாறு தாம் தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு ஆலோசனை வழங்குவதாக இந்திய பிரதமர் கூறியுள்ளார்.
இலங்கையில் கூடிய விரைவில் சமாதானத்தை கொண்டு வருவதற்காக இந்திய அழுத்தம் கொடுக்கும் என தெரிவித்துள்ள மன்மோகன் சிங், அரசியல் தீர்வு நடைமுறையில் இருக்கும் அமைதியான இலங்கையை காண வரவேண்டும் என்பது தனது ஆசை எனவும் இதனால் தீர்வுத்திட்டத்தை விரைவாக முன்வைக்குமாறும் கூறியுள்ளார்.