வங்காளதேசம், நேபாளம், பூட்டான், மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் ஆகிய 8 நாடுகளின் கூட்டமைப்பான சார்க் அமைப்பின் உச்சி மாநாடு இன்று முதல் இரண்டு நாட்களுக்கு மாலத்தீவில் உள்ள அட்டு தீவில் நடைபெற உள்ளது. இந்த உச்சி மாநாட்டில் இந்த 8 நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாகிஸ்தான் அதிபர் ஆகியோரை மன்மோகன் சிங் சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்க் மாநாட்டின் பாதுகாப்பு ஏற்பாடுகளை இலங்கை அரச கூலிப்படைகளும் மோப்ப நாய்களும் கவனித்துக் கொள்கின்றன.