இலங்கை வடக்கு பகுதியில் தேர்தல் நடப்பதற்கு வற்புறுத்தியதற்காக பிரதமர் மன்மோகன்சிங்குக்கும், இந்தியாவுக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இலங்கை போரில் தமிழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் நான் பெரும்பான்மை மக்கள் ஆதரவோடு வெற்றி பெற்றிருக்கிறேன்.
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இலங்கைக்கு, இந்தியா அழுத்தம் பிரயோகித்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்வதாக விக்னேஸ்வரன் தெரிவத்துள்ளார். கொழும்பைப் போன்றே யாழ்ப்பாணத்துடனும் இந்தியா உறவுகளைப் பேண வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீங்கள் (மன்மோகன்சிங்) இலங்கைக்கு வர வேண்டும். கொழும்பு மற்றும் யாழ்பாணத்துக்கு வரவேண்டும் என நான் அழைப்பு விடுக்கிறேன். இதன் மூலம் தமிழர்கள் தொடர்பான முக்கியமான பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு ஏற்படும் என நான் கருதுகிறேன். தங்கள் வருகை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிப்பதாக இருக்கும்.