இந்தியா இறக்குமதி செய்யும் 80 சதவீத எண்ணெயில் 12 சதவீதம் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் எண்ணெயின் அளவு குறைக்கப்பட்டதையடுத்து, அகமது நிஜாத் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார். சீனா உட்பட ஆசிய நாடுகளின் வர்த்தகத்தை அமரிக்காவின் முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவரும் நோக்கோடு அமரிக்கா செயற்பட்டு வருகின்றது. இலங்கை போன்ற சிறிய நாடுகளின் உள் விவகாரங்களில் கூட நேரடியான தலையீடு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஆசிய நாடுகளுக்குத் தேவைப்படும் எண்ணை வளத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய கிழக்கின் எண்ணை மற்றும் எரிவாயு வளங்களை முழுமையான கட்டுப்பாட்டினுள் கொண்டுவர அமரிக்க முயற்சிக்கின்றது. அமரிக்காவின் இந்த நோக்கத்திற்கு எதிரான அணி ஒன்றும் உருவாகியுள்ளது. இந்த நிலையில் அணி சேரா நாடுகளின் மாநாடு ஈரானில் நடைபெற உள்ளது.
ஈரானில் ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள அணி சேரா நாடுகளின் கூட்டமைப்பு(நாம்) மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நிஜாத் அழைப்பு விடுத்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையேயான உறவு குறித்தும், சர்வதேச பிரச்னைகள் குறித்தும் பேசியதாகவும் விரைவில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அலி அக்பர் சலி தில்லி வந்து பிரதமரைச் சந்தித்து மாநாட்டு அழைப்பிதழைத் தருவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.