Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மன்மோகன் திடீர் மாற்றம் : இலங்கை இந்திய ஒப்பந்தப்படி தீர்வுகாண வேண்டும்!

இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலை தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங், தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்றுமாறு சிறிலங்க அதிபரிடம் தான் வலியுறுத்தியதாகக் கூறினார்.

எகிப்தில் நடைபெற்ற அணி சேரா நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ள வந்த சிறிலங்க அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் பிரதமர் மன்மோகன் சிங் பேசினார். இந்த சந்திப்பு குறித்து இன்று மாநிலங்களையில் விளக்கமளித்தார்.

 இலங்கைத் தமிழர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், அது தொடர்பாக 1987ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி தீர்வு காணப்பட வேண்டும் என்றும் நான் வலியுறுத்தினேன்” என்று கூறினார்.

இலங்கையில் 33 முகாம்களில் 3 இலட்சம் தமிழர்கள் உள்ளனர். அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளும், மறுவாழ்விற்கான அடிப்படைகளும் முழு அளவில் அளிக்கப்படவேண்டும் என்றும் தான் கூறியதாகவும், இலங்கையில் தமிழர்கள் கெளரவத்துடனும், கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தான் வலியுறுத்தியதாகத் தெரிவித்தார்.

Exit mobile version