இலங்கையிலிருக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் இலங்கைப் பிரச்சனையோடு தொடர்புடைய ஒவ்வொருவருக்கும் கொல்லப்பட்ட மக்களின் தொகை இவர்கள் கூறும் தொகையைவிட குறைந்தபட்சம் ஐந்து மடங்காக ஆவது இருக்கும் என்பது வெளிப்ப்டையாகத் தெரியும். உலகின் மாறும் ஒழுங்கிற்குள் மன்னிப்புச் சபையும் தன்னை நுளைத்துக்கொண்டுள்ளது தெளிவாகிறது. இன்று வரைக்கும் நாடுகடந்த தமிழீழம், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்ற புலிகளின் தோற்றுப்போன சிந்தனை முறையை நடைமுறைப்படுத்த பணம் வாரி இறைக்கப்படுகிறது. படுகொலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்தி அதுகுறித்து உலகெங்கும் பரந்திருக்கும் மனிதாபிமானிகள் மத்தியில் பிரச்சாரம் செய்யப்படவில்லை. ஐ. நாவிற்கு அழுத்தம் கொடுக்க இவ்வாறான எந்த பலத்தை உருவாக்கும் முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. தனி நபர்களிடம் முடங்கிப் போயிருக்கும் புலிகளின் பணம் இவ்வாறான தேவைகளுக்குப் பயன்படுமானால் நாளைய சமூகம் புலம்பெயர் தமிழர்களுக்கு நன்றிகூறும்.