மகிந்த ராஜபக்சவின் பாசிச சர்வாதிகாரத்தை நியாயப்படுத்துவதற்ககவும், உரிமைகளுக்காகப் போரடுவோரை நசுக்குவதற்காகவும் புலிகள் மீண்டுவிட்டார்கள் என்ற பிரச்சாரமே அவர்களுக்குப் பயன்படுகிறது.
புலம் பெயர் நாடுகள் புலிகள் தம்மை மீளமைத்துக் கொண்டுள்ளார்கள் என்றும் இன்னும் நாட்டில் புலி அபாயம் நீங்கவில்லை என்றும் காரணம் காட்டி வடக்கில் இராணுவத்தை மீளப்பெற மறுக்கின்றனர். இதனையே முன்வைத்து தமிழ்ப் பிரதேசங்கள் திட்டமிட்ட சிங்கள பௌத்த ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றன.
இலங்கை அரசின் இந்தப் பொய்ப் பிரச்சாரத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் புலம் பெயர் நாடுகளில் புலிக் கொடியோடு அத்தனை ஆர்ப்பாட்டங்களும் நடைபெறுகின்றன. பொதுவாக அரச ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படுவோரே ஆர்ப்பாட்டங்களில் புலிக் கொடியோடு உள் நுளைவதையும் அவதானிக்க்கக் கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் புலிகளின் தொடர்ச்சி என தம்மை அறிவித்து புலிக் கொடியோடு மேற்கில் உலாவரும் ருத்திரகுமாரனின் அறிக்கை அடிப்படையில் ஆட்காட்டும் அறிக்கை.
மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்புக்கு வெளிப்படையாக ஏற்படுத்தப்பட்டு வரும் தொடர் அச்சுறுத்தலுக்கு நாடு கடந்த தமிழீழ அரசு தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
மதங்களைக் கடந்து மனிதநேயத்தின்பால் மக்களின் நீதிக்காகக் குரல்கொடுத்து வரும் ஆயர் இராயப்பு ஜோசப்பின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரியும், அவர் மீதான அச்சுறுத்தல்களுக்கு கண்டித்தும் மன்னார் புனித செபஸ்தியார் தேவாலயத்தில் கண்ட ஒன்றுகூடலொன்று நேற்று இடம்பெற்றிருந்தது.
இந்த ஒன்றுகூடலுக்கு வலுவூட்டும் வகையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன், வானோசை ஒலிபரப்பின் ஊடாக செய்தியொன்றினைத் தெரிவித்திருந்தார்.
தாம் இந்த ஒன்றுகூடலை ஆதரிப்பதாக அந்த வானொலியில் கூறினார். இலங்கையில் மக்கள் துவம்சம் செய்யப்படும் போதெல்லாம் ஒரு போராட்டத்தைத் தாம் வாழும் நாடுகளில் உள்ள ஜனநாய முற்போக்கு சக்திகளுடன் இணைந்து நடத்த முடியாத புலம் பெயர் அமைப்புக்களின் உச்சத்தில் அமர்ந்திருபவர் ருத்திரகுமார்.
மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களைக் கூட புலிச் சாயம் பூசி மக்களைக் காட்டிக்கொடுத்து இலங்கை அரசின் அரசியலுக்கு வலுச்சேர்க்கும் இவ்வாறான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும்.